பாக்கிஸ்தானின் குஜராத் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த பெண்கள் மீது வாலிபர் அமிலத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
பாக்கிஸ்தானின் குஜராத் பல்கலை கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவரினை அவரது மாமன் திருமணம் செய்துக் கொள்ளுமாறு தொல்லை செய்துள்ளார். அவரின் அதட்டலுக்கு பயப்படாத அப்பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனால் கோபமுற்ற அப்பெண்ணின் மாமன், சம்பவத்தன்று கல்லூரி சென்ற பெண்ணின் மீது அமிலத்தினை வீசியுள்ளார். இந்த நிகழ்வின் போது அப்பெண்ணின் சகோதிரிகள் இருவரும் அவருடன் இருந்துள்ளனர். இதனால் இந்த 3 பெண்களின் மீது அமிலம் வீசப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு மறுத்தப் பெண்ணை தவிர அவரது சகோதரிகளின் நிலைமை தேரியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைகிடமாக நீடிக்கிறது.
இச்சம்வம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி அமீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடை குற்றவாளியின் நண்பர்களை காவல்துறையினர் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானில் இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல, மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த ஆண்டில் மட்டும் 147 பெண்கள் இதேப்போன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன!