ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு GOOD News! 7 EU நாடுகளின் முக்கிய அறிவிப்புகள்!

கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2022, 06:26 PM IST
  • இத்தாலி தனது வருடாந்திர பணி அனுமதிகளை 5,000 என்ற அளவில் உயர்த்தியுள்ளது.
  • நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் பணி அனுமதி பெறுவதை ஸ்பெயின் எளிதாக்கியுள்ளது.
  • டென்மார்க், வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில், காலி இடங்களுக்கான புதிய பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு GOOD News! 7 EU நாடுகளின் முக்கிய அறிவிப்புகள்!  title=

கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவைப் போலல்லாமல், சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகிலேயே மிகவும் கடினமான குடியேற்றச் சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆனால், நிலைமை தற்போது மாறி வருகிறது. பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் தனது குடியேற்ற விதிகளைத் தளர்த்துகின்றன.

ஐரோப்பாவில் வேலை தேடும் திட்டம் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். 7 ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பின்லாந்து

பின்லாந்து மிகவும் திறமையான தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர், தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து ஐரோப்பாவில் குடியேற வகை செய்யும் நோக்கில், தகுதியான விண்ணப்பங்களை 14 நாட்களுக்குள் செயலாக்குவதற்கான விரைவான செயல்முறையைத் தொடங்கியுள்ளது. 

2. டென்மார்க்

டென்மார்க், வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில், காலி இடங்களுக்கான புதிய பட்டியல்களை வெளியிட்டுள்ளது. உயர் படிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் என இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்!

3. ஸ்பெயின்

குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கான பணி அனுமதி விண்ணப்பிப்பதற்கான தேவைகளைக் குறைக்கும் ஒரு நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையின் மூலம், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் பணி அனுமதி பெறுவதை ஸ்பெயின் எளிதாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் 30 மணிநேரம் வரை வேலை செய்ய முடியும். முன்னர், இந்த நாட்டில் வேலையில் சேர, மூன்று வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

4. இத்தாலி

இத்தாலி தனது வருடாந்திர பணி அனுமதிகளை 5,000 என்ற அளவில் உயர்த்தியுள்ளது, மேலும் 2022 இல் 75,000 வெளிநாட்டு ஊழியர்களை அழைக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கான சாத்தியத்தை சரிபார்க்க அமைச்சரவையில் பணிகள் நடந்து வருகின்றன என இத்தாலிய அரசாங்கத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!

5. போர்ச்சுகல்

போர்ச்சுகல் சமீபத்தில் ஒரு குறுகிய கால வேலை விசாவை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் மட்டுமே வேலை செய்யும் நோக்கத்துடன் போர்ச்சுகலுக்கு வர அனுமதி வழங்கப்படும். முதலில் 120 நாட்களுக்கு வழங்கப்பட்ட விசா, மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

6. அயர்லாந்து

அயர்லாந்து அரசாங்கம் இந்த ஆண்டு ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அனுமதி அமைப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அயர்லாந்தில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை மருத்துவர்களாகப் பணியாற்றிய, வெளிநாடுகளை நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் முன்நிபந்தனைகள் இன்றி, பணிபுரிய விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும், அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் நாட்டில் பணிபுரியத் தகுதியுடையவர்கள் என்றும் அரசாங்கம் அறிவித்தது.

7. ஸ்வீடன்

ஸ்வீடன் முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களை சுரண்டுவதை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி உள்ளது. சிறிய பிழைகள் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்களை இனி வெளியேற்ற முடியாது. மேலும் ஏஜென்சியின் வேண்டுகோளின்படி ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத ஊழியர்களுக்கான பணி நிலைமைகளைப் புகாரளிக்கத் தவறும் முதலாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News