“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கைக்கு விஜய் சேதுபதியின் பதில்

800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Last Updated : Oct 19, 2020, 06:14 PM IST
    1. 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று, நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
    2. இலங்கையை தனது சொந்த மண் என்று கூறியிருக்கும் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை.
    3. முத்தையா முரளிதரன் பிரச்சனைகள் அடுத்தடுத்து வருவதால் விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“நன்றி... வணக்கம்”-முத்தையா முரளிதரன் அறிக்கைக்கு விஜய் சேதுபதியின் பதில் title=

'800' : முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற திரைப்படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பதற்காக அறிவிப்பு வெளியானது முதல் அந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என அவருக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திரைப்படம் குறித்து சர்ச்சைகள் எழும்பி வருகிறது.

இலங்கையை தனது சொந்த மண் என்று கூறியிருக்கும் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை. எனவே அவரது வரலாற்றைச் சொல்லும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று காரணம் சொல்லப்பட்டது.

 

ALSO READ | ‘தமிழினத் துரோகி" முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது: வைகோ கோரிக்கை

எனினும் விஜய் சேதுபதி அது குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் இருந்தார். மேலும் ஒரு நடிகர் என்ன வேடத்தில் நடிக்கலாம் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக் கூடாது என்று பலரும் கருத்து தெரி வித்திருந்தனர். 

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் பிரச்சனைகள் அடுத்தடுத்து வருவதால் விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்., எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது.

இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

இந்நிலையில் 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி... வணக்கம்... என விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

ALSO READ | "800" படத்தின் Motion Poster வெளியானது: முத்தையா முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News