என் நெஞ்சில் குடியிருக்கும்... கூலான குட்டி கதை... செல்பி வீடியோ - விஜய்யின் முழு பேச்சு!

Varisu Audio Launch : 2 ஆண்டுகள் கழித்து வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மத்தியில், நடிகர் விஜய் பேசிய கருத்துகளை இங்கு காணலாம்.  

Written by - Sudharsan G | Last Updated : Dec 25, 2022, 06:26 AM IST
  • தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.
  • அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரே ஆயுதம்.
  • வைரலாகும் விஜய் செல்பி வீடியோ.
என் நெஞ்சில் குடியிருக்கும்... கூலான குட்டி கதை... செல்பி வீடியோ - விஜய்யின் முழு பேச்சு! title=

Varisu Audio Launch Vijay Speech: விஜய் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (டிச. 24) நடைபெற்றது. படக்குழு, திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உடன் அரங்கமே நிரம்ப வழிந்தது. 

சுமார் 2 வருடங்களுக்கு பின் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என விஜய் உச்சரிப்பதற்கும், அவரின் உரையையும் அதில் அவர் சொல்லும் குட்டி கதையையும் கேட்க ஒட்டுமொத்த தமிழ்நாடும் நேற்று தவமாய் தவமிருந்தது. 

மேடையில் பந்துவீசிய விஜய்

அந்த வகையில், விழா மேடையில் நடிகர் விஜய்,"நம்ம போகின்ற பயணம் நிறைவாக இருக்கணும் என்றால் நாம் போகின்ற பாதை சரியா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல், எனக்கு நிறைய அன்பு கொடுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டியது. இனிமே இது தான்" எனக்கூறிவிட்டு, கிரிக்கெட்டில் பந்துவீசுவது போன்று செய்துகாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர்,"யோகி பாபு ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் இருந்தார். இப்போது யோகி பாபுவை ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என பலரும் ஆசைபடுகின்றனர். அந்த வளர்ச்சி சந்தோஷம் அளிக்கிறது. வந்துவிட்டீர்கள் எஸ்.ஜே. சூர்யா, இன்னும் கொஞ்ச காலம்தான். எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடித்தது குறைவுதான். அவருடைய கனவு கொஞ்ச தூரத்தில் தான் உள்ளது. 

மேலும் படிக்க |  Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு - வீடியோ!

குட்டி கதை 

ஒரு குட்டி பசங்க கதைதான்.  உறவுகளை பற்றிய படம் என்பதால் உறவுகளை பற்றிய குட்டி கதை சொல்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்கிறார்கள். அப்பா தினமும் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வருகிறார். தங்கைக்கு கொடுத்த சாக்லேட்டை அவர் தினமும் உடனே சாப்பிட்டு விடுகிறார். அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளித்து வைச்சு சாப்பிடுகிறார். ஒருநாள் தங்கை அண்ணனிடம் அன்பு என்றால் என்ன என்று கேட்கும் போது, நீ சாக்லேட்டை எடுத்துவிடுவாய் என தெரிந்தும் நான் அதே இடத்தில் மீண்டும் மீண்டும் சாக்லேட் வைக்கிறேன் அல்லவா... அதுக்கு பேரு தான் அன்பு என்றார். 

அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரே ஆயுதம். எதற்காகவும் அவற்றை விடக்கூடாது. அதில் ஒன்று உறவுகள், மற்றொன்று நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும். 

ரத்த தானம் செயலை நான் தொடங்க காரணம் ரத்தத்திற்கு மட்டும் தான் வேறுபாடு கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி கிடையாது, மதம் கிடையாது. மனிதர்கள் தான் பிரித்து பார்த்து பழகி விட்டோம். ரத்தத்திற்கு அந்த பேதம் கிடையாது. 

6000 பேருக்கு மேல் அந்த செயலியில் இணைந்து உள்ளனர். பலர் ரத்த தானம் செய்து உள்ளனர். இது எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்குதான் சேரும். பிடித்து இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்".

'எனது போட்டியாளர்'

30 வருட பயணம் வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஷயம் பிரச்சினைகள் பழகிவிட்டது. பிரச்சனைகள் வருகிறது, எதிர்க்கிறார்கள் அப்போது நாம் சரியான பாதையில்தான் போகிறோம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.

1990களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார். போக போக ஒரு சீரியசான போட்டியாளராக இருந்தார். அவரை தாண்ட வேண்டும் என நானும் போட்டி போட்டு ஓடினேன். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும். அதுதான் உங்களை உயர்த்தும். நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர்" என்றார். 

வைரலாகும் விஜய் செல்பி வீடியோ

பின் விழாவை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினர். "உங்களுக்கு எது போதை?" என கேட்க அதற்கு விஜய் தயங்காமல்,"ரசிகர்கள் தான்" என்றார். தொடர்ந்து, ரசிகர்கள் உடன் நடிகர் விஜய் செல்பி கேமராவில் வீடியோ எடுத்து கொண்டார். 

தொடர்ந்து,"எனக்கு ட்வீட் பண்ண தெரியாது. நான் என்னுடைய அட்மினை அழைக்கிறேன்" என்றுகூறிவிட்டு, விஜயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மேலாளரும், அவரின் மேலாளருமான ஜெகதீஷை அழைத்து ட்வீட்டில் என் நெஞ்சில் குடியிருக்கும் என குறிப்பிடும்படி கேட்டுக்கு கொண்டார்.  

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விட்டது. எங்கு திரும்பினாலும் அந்த வீடியோ மட்டும் நிறைந்துள்ளது. தற்போது, ட்விட்டரில் 50 லட்சம் பார்வையாளர்களை தாண்டிவிட்டது. மேலும், லட்சக்கணக்கானோர் லைக்குகளை அள்ளி வீசியுள்ளனர். மேலும், விழாவில் ரஞ்சிதமே, ரஞ்சிதமே பாடலை விஜய் பாட ரசிகர்களும் கூடவே பாடினார்கள். விஜய் சற்று நடனமும் ஆடினார்.

மேலும் படிக்க | Varisu Audio Launch : வாரிசு விழாவுக்கு வருகை தந்த பிரபலங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News