இன்று மாலை 6 மணிக்கு ‘கருப்பன்’ ட்ரைலர்!

Last Updated : Sep 18, 2017, 03:21 PM IST
இன்று மாலை 6 மணிக்கு ‘கருப்பன்’ ட்ரைலர்! title=

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ளது.

ஜல்லிக்கட்டை மையபடுத்தி கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

‘விக்ரம் வேதா’ படத்துக்குப்ப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கருப்பன்’. 'ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ளார். ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை தயாரிக்கிறார். இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

 

இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலரினை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Trending News