பாலாவுக்கு துணை நிற்போம் - சூர்யா தரப்பு விளக்கம்

வணங்கானிலிருந்து சூர்யா வெளியேறியதாக பாலா அறிவித்திருக்கும் சூழலில் அதுகுறித்து சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 5, 2022, 10:21 AM IST
  • வணங்கான் படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா
  • பாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்
  • சூர்யா தற்போது விளக்கமளித்திருக்கிறார்
 பாலாவுக்கு துணை நிற்போம் - சூர்யா தரப்பு விளக்கம் title=

பாலாவும், சூர்யாவும் இணைந்த படமான வணங்கான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே உருவானது. ஆனால் திடீரென வணங்கானிலிருந்து சூர்யா வெளியேறியதாக பாலா நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே 'வணங்கான்" திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.

அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து  சூர்யாவும், 2D Entertainment நிறுவனமும் வணங்கானிலிருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணாவுடன் துணை நிற்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாலாவுக்கு பலத்த அடி?... வணங்கானிலிருந்து வெளியேறினார் சூர்யா... என்னதான் நடந்தது?

மேலும் படிக்க | வடிவேலுவுக்கு அடுத்து யோகிபாபுவா... போடப்படுமா ரெட் கார்ட்?... கோலிவுட்டில் பரபரப்பு

மேலும் படிக்க | வடிவேலு திமிர் பிடித்தவரா?... அவரே கொடுத்திருக்கும் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News