தேசிய விருதை பெற்ற சூர்யா - ஜோதிகா ஜோடி

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் குடியரசு தலைவரிடம் இருந்து தங்களின் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2022, 07:28 PM IST
  • சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றது.
  • சிவரஞ்சனியயும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 விருதுகளை பெற்றது.
  • தாதாசாகேப் பால்கே விருதை, மூத்த நடிகை ஆஷா பரேக் பெற்றுக்கொண்டார்.
தேசிய விருதை பெற்ற சூர்யா - ஜோதிகா ஜோடி  title=

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவருடன், மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய விருது தேர்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும், விருதை பெறுவதற்கும், நாடு முழுவதும் இருந்து திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் விழாவில் வருகை தந்தனர். தமிழ்நாடு சார்பில் சூரரை போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட பல திரைப்படங்கள் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய  விருதை குவித்தது. 

மேலும் படிக்க | அவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது - மீனாவின் வைரல் பதிவு

தொடர்ந்து, நடிகர் சூர்யா, இயக்குநர்கள் சுதா கொங்காரா, வசந்த், மண்டேலா இயக்குநர் மடோண் அஸ்வின், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார், எஸ்.தமன் (அள வைகுண்டபுரம் லோ - தெலுங்கு) உள்ளிட்டோர் பங்கேற்று, குடியரசுத் தலைவரிடம் தங்களின் விருதைுகளை பெற்றுக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி, சூரரை போற்று திரைப்படத்திற்கு சிறந்த தயாரிப்பாளர் என்ற விருதை 2D நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா பெற்றுக்கொண்டார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தில் நடித்த லஷ்மி பிரியா சந்திரமௌலியும் விருதை பெற்றுக்கொண்டார்.

மேலும், தாதாசாகேப் பால்கே விருதை, மூத்த நடிகை ஆஷா பரேக் பெற்றுக்கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து, பிரபல மலையாள திரைப்படம் 'ஐயப்பனும் கோஷியும்' திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி பாடகி விருதை 62 வயதான நஞ்சமா பெற்றுக்கொண்டார். அந்த திரைப்படத்திற்கான சிறந்த இயக்குநர் விருதை, மறைந்த இயக்குநர் சச்சிதானந்தனின் மனைவி பெற்றுக்கொண்டார். அதேபோன்று, அந்த திரைப்படத்திற்கான சிறந்த துணை நடிகர் விருதை பிஜூ மேனன் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News