'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா!

திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’.   

Written by - Yuvashree | Last Updated : Jan 13, 2024, 01:39 PM IST
  • திறமைசாலிகளை அங்கீகரிக்கும் நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி.
  • சினேகா இந்நிகழ்ச்சிக்கு விளம்பர தூதராக மாறியுள்ளார்.
  • www.globenexusmedia.com என்ற இணையம் மூலம் இதில் கலந்து கொள்ளலாம்.
'நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா! title=

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch)  ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.

நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதன் மூலம் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாய் மின்னுவது உறுதி. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மட்டும் இன்றி திரைப்படங்களிலும் அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sneha

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்க,  இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். நடிப்பு, நடனம், பாட்டு பாடுவது என எந்த திறமையாக இருந்தாலும் அதை 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவாக  தயாரித்து பதிவேற்றம் செய்யலாம். நடனத்தில் தனி ஒருவர் நடனம் ஆடுவது மட்டும் இன்றி, குழுவாக நடனம் ஆடும் வீடியோவும் பதிவேற்றம் செய்யலாம். குழு நடனம் என்றால் ஒரு குழுவில் 3 பேர் முதல் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா

இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 24 பேர்கள் பங்கேற்கும் இறுதிப் போட்டி பிரமாண்டமான முறையில்,  தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறும். 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும். 

நடிப்பு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிக்கவும், இசை திறமையுள்ளவர்களுக்கு பாடகர், இசைக் கலைஞர்,  நடனத்தில் திறமையுள்ளவர்களுக்கு நடனம் என பல வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ மற்றும் பட தலைப்பு ஆகியவை ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ஆண்டனி தாசன் இயக்குகிறார். மற்றொரு படத்தை சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களை குளோப் நெக்சஸ் நிறுவனம் பிரபலப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு டிசம்பர் மாதம் தொடங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதியாகும். இறுதிப் போட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள www.globenexusmedia.com என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்வதோடு, உங்களது 30 நொடிகள் வீடியோவையும் இதே தளத்தில் பதிவேற்றலாம்.

மேலும் படிக்க | அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News