புற்றுநோயால் பாதிப்படைந்த குழந்தைகளை விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்த செப்டம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று உலக ரோஜா தினம் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் கடைப்பிடிக்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுவரும் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
குழந்தைகள் மத்தியில் மேடையில் பேசிய சிம்பு நீங்கள் அனைவருமே எங்களுக்கு இன்ஸ்பிரேஷன், நீங்கள் தான் உண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார், எல்லோரும் பாசிடிவிட்டி ஆக இருங்கள் அதுவே உங்களை குணப்படுத்தும் என்றார். மேலும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் குழந்தைகளுக்கு பூச்செண்டை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் "லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார்" பாட்டுக்கு நடனமாடிய நடிகர் சிம்பு!#Cancer#CancerAwareness#cancerpatients#simbu spends time with little kids at #AppoloHospital @Actor_SimbuFC@STRhere@SilambarasanTR_ @STRnetwork@thirdeyecinemas pic.twitter.com/J6rPhPbaNp
— thirdeye Prakaash (@Prakaash3rdeye) September 22, 2021
அதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்பு, கடந்த முறை என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய குறல் பதிவு மட்டும் அந்த குழந்தைகளுக்காக அனுப்பிவைத்தேன், அதை கேட்டதும் அந்த குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்ததாக கேள்விப்பட்டேன். அதனாலே இந்த வருடம் குழந்தைகளுக்காக நேரில் கலந்து கொண்டேன். குழந்தைகள் என்னை கண்டதும் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைகளை கண்டதும் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நான் இங்கு கலந்துகொண்டது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கவும் மற்றும் அந்த அன்புக்காகவும் மட்டுமே. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நம்பிக்கை இழக்க வேண்டாம், நேர்மறையான எண்ணங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். உங்கள் ரசிகர்களை புகைப்பிடித்தலை தவிர்க்க சொல்விர்களா? என்ற கேள்விக்கு புகை பிடித்தால் மட்டுமே புற்றுநோய் வருவதில்லை பல வகையில் புற்று நோய் வருகிறது. அந்தவகையில் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்தார் .
திரைப்படங்களில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்களுடைய நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு தொடர்ந்து நாம் பாசிட்டிவ் எண்ணத்துடன் இருக்க வேண்டும் நாம் நினைப்பது தான் நடக்கும். மேலும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் வரும் காலங்களில் அதை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR