நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`சீமராஜா' படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
`24 ஏ.எம்.ஸ்டூடியோஸின் புரொடக்ஷன்ஸ் எண் 7-வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பி.எஸ்.மித்ரனும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
It’s official : In the journey of Making good content and wholesome entertainment, Today with all your blessings and support, We are so happy to announce our Production No:7 with our @Siva_Kartikeyan and @Psmithran
Other cast & crew will be announced soon..
— RD RAJA (@RDRajaofficial) September 24, 2018