உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ‘பதேர் பஞ்சாலி’!

சத்யஜித் ரேயின் சிறந்த காவியமான ‘பதேர் பஞ்சாலி’ பிபிசி-ன் 100 சிறந்த வெளிநாட்டு மொழி படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற இந்திய திரைப்படம் இது ஒன்று தான் என்பது குறிப்பிடத்தகது.

Last Updated : Nov 2, 2018, 06:17 PM IST
உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ‘பதேர் பஞ்சாலி’! title=

லண்டன்: சத்யஜித் ரேயின் சிறந்த காவியமான ‘பதேர் பஞ்சாலி’ பிபிசி-ன் 100 சிறந்த வெளிநாட்டு மொழி படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற இந்திய திரைப்படம் இது ஒன்று தான் என்பது குறிப்பிடத்தகது.

சத்யஜித் ரேயின் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் The Apu Trilogy. மூன்று பெங்களி படங்களின் தொகுப்பான இத்திரைப்படத்தில் Pather Panchali (1955), Aparajito (1956) மற்றும் The World of Apu (1959) இடம்பெற்று இருந்தது. இந்த தொகுப்பின் முதல் பகுதியான ‘பதேர் பஞ்சாலி’ BBC-ன் உலகின் சிறந்த 100 திரைப்படங்கள் என்னும் பட்டியலில் 15-வது இடம் பிடித்துள்ளது.

43 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சினிமா விமர்சகர்களின் கருத்து அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

விமர்சகர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது. இந்த பட்டியலில் இறுதியாக 24 நாடுகளின் 67 வெவ்வேறு இயக்குநர்களால் இயக்கப்பட்ட, ஆங்கிலம் அல்லாத 19 மொழி திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

BCC-ன் இறுதி பட்டியலில் 27 பிரஞ்சு படங்கள் இடம்பிடித்து முதல் இடத்திலும், மாண்டரின் 12 திரைப்படங்கள் இரண்டாம் இடத்திலும், இத்தாலி மற்றும் ஜப்பான் தலா 11 திரைப்படங்கள் இடம்பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சில படங்கள் - குரோசாவாவின் 'ரஷ்மோன்', வோங் கார்-வேய்'ஸ் இன் தி மூட் ஃபார் லவ் ', ஆண்ட்ரி டார்ஸ்கோவ்ஸ்கியின்' தி மிரர்', அஸ்கார் ஃபாரதாவின்' எ சப்பரேசன்', கில்லர்மோ டெல் டோரோவின்' பான்'ஸ் லாபிரிப்ட்', இங்கர் பெர்க்மேனின்' தி செவன்த் சீல் 'மற்றும் அல்ஃபோன்ஸோ க்யூரான்'ஸ்' ஒய் டூ மாமா தம்பியன்', ஆகும்

இப்பட்டியலில் இடம்பெற்ற 100 திரைப்படங்களில் நான்கு மட்டுமே பெண் இயக்குநர்களால் இயக்கப்பட்ட திரைப்படங்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. எனினும், வாக்கெடுப்பில் பங்குபெற்ற விமர்சகர்களில் 45% பேர் பெண் விமர்சகர்கள் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது!

Trending News