கொரோனா வைரஸ் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மாதம் மார்ச் 25 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரிக் குவித்தது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு கிடைத்த வரவேற்பை போலவே இந்த திரைப்படத்துக்கும் மக்களிடத்தில் வரவேற்பு இருந்தது.
மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!
இதனால், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் களைக்கட்டியது. ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்ததால், படம் பார்த்துவிட்டு ஒருவித பூரிப்புடனேயே மக்கள் வெளியே வந்தனர். தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், முதல் வாரத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறின.
7வது வாரத்தை எட்டியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம், லேட்டஸ்டாக வெளியாகிருக்கும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் ஆயிரம் கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இரண்டு இந்திய படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் இடம்பிடித்துள்ளன. பாலிவுட்டில் வெளியான டங்கல் திரைப்படம் 2017-ல் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் ஆயிரம் கோடி ரூபாய் கலெக்ஷனை பெற்றது.
இப்போது, அவருடைய இயக்கத்திலேயே வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மீண்டும் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் இணைந்துள்ளது. அதாவது, ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் இடம்பிடித்திருக்கும் 3 இந்திய திரைப்படங்களில் 2 படங்கள் ராஜமௌலி இயக்கிய படங்களாகும். இதன் மூலம் இந்திய சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக ராஜமௌலி உயர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க | RRR பார்ட் 2 எடுக்க ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் விருப்பம் - ராஜமௌலி கொடுத்த பதில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR