கொரோனோவுடன் போராடி நம்மை எல்லாம் மீளாத்துயரில் விட்டு சென்ற எஸ். பி. பாலசுப்ரமணியம், யாராலும் ஈடு செய்ய முடியாத சாதனைகளை செய்துள்ளார்..!
கடந்த 1981 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கேலியே படம் மூலம் பாலிவுட் (Bollywood) உலகில் நுழைந்த SP. பாலசுப்ரமணியம் (SP.Balasubramaniam), ஒரு பெரிய ஆர்சிகர்களை கொண்ட பாடகராகினார். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படம் என்பதால் SPB-யை பாட வைக்க ஆரம்பத்தில், இசையமைப்பாளர்கள் தயங்கினார்கள். ஆனால் டைரக்டர் பாலசந்தர் தனது முடிவில் உறுதியோடு இருந்ததால் இந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த பாடல் ஹிட்டானது மட்டுமல்லாமல், அவருக்கு இரண்டாவது தேசிய அவார்டையும் வாங்கி கொடுத்தது.
இதை தொடர்ந்து பாலிவுட்டில் அவர் பாடிய பல பாடல்கள் காலத்தால் அழியாதவையாக ரசிகர்கள் மனதில் நின்றது. லதா மங்கேஸ்கருடன் அவர் பாடிய டூயட் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். இஸ்கா நாம் ஹை ஜீவன் தாரா, ஓ மரி தில்ருபா, பாஹோன் மேன் பார்கே பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.
நவ்ஷாத், கல்யான்-ஆனந்த், ஆர். டி. பர்மன் என எல்லா இசை ஜாம்பவான்களுடனும் இணைந்து பணியாற்றிய SPB, ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, அட இவ்வளவு ஏன்... சல்மான், ஷாரூக் என கிட்டத்தட்ட எல்லா டாப் ஹீரோக்கள் உடனும் பணியாற்றியுள்ளார்.
ALSO READ | மறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
ஒரு காலகட்டத்தில் சல்மான் கானின் ஆஸ்தான பாடகராக SPB இருந்தார் என கூறினால் மறுப்பதற்கில்லை. 1980-90 க்கு இடைப்பட்ட காலத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக திகழ்ந்த சல்மான் நடித்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டானதற்கு காரணம் அருமையான இசையமைப்பும், காதல் சொட்ட சொட்ட SPB பாடியதும் தான் என்றால் மிகையாகாது. பின் கொஞ்சம் நாள்கள் இடைவெளி எடுத்த SPB, 2013-ல் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் டைட்டில் பாடல் மூலம் மறுபடியும் பாலிவுட்டில் தனது முத்திரையை பதித்தார். இந்த பாடலும் சூப்பர் ஹிட் தான்.
இத்தனை சாதனைகள் புரிந்த SPB இப்போது நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரின் பாடல்களும் சரி, அவரும் சரி மறக்கப்படாமல் ரசிகர்கள் மனதில் என்றும் அழியாமல் இசையாய் நிற்க்கிறார்.