தீபா தான் பல்லவி என அறிந்த கார்த்திக்.. அடுத்து எடுத்த முடிவு என்ன? பரபரப்பில் கார்த்திகை தீபம்

தீபா தான் பல்லவி என கார்த்திக் அறிந்து கொண்டதால் அடுத்து அவர் எடுத்த முடிவு என்ன? என்ற பரபரப்பான கட்டத்தில் கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2024, 01:18 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
  • பல்லவி யார் என கண்டுபிடித்த கார்த்தி
  • மனைவி என தெரிந்து அதிர்ச்சி அடைகிறான்
தீபா தான் பல்லவி என அறிந்த கார்த்திக்.. அடுத்து எடுத்த முடிவு என்ன? பரபரப்பில் கார்த்திகை தீபம் title=

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக பாடுவதற்காக ஆசிரமத்துக்கு வந்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பல்லவியை தேடும் கார்த்திக்

அதாவது கார்த்தியும் இளையராஜாவும் பல்லவி யார் என்பதை பார்ப்பதற்காக ஆசிரமத்துக்கு வந்து கொண்டிருக்க வழி மறிக்கும் ரவுடிகள் அவர்களை தாக்க இருவரும் மயங்கி விடுகின்றனர்.பிறகு ரவுடிகள் ரூபாஸ்ரீக்கு தகவல் கொடுக்க அவள் பணத்தையும் போட்டு விடுகிறாள். 

மேலும் படிக்க | ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்! வெளியானது டீஸர்!

நடந்து செல்லும் கார்த்திக்

ஆசிரமத்தில் தீபா படுவதற்காக தயாராக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கார்த்திக் கண் திறந்து ஆசிரமத்துக்கு கிளம்பி வருகிறான், கொட்டும் மழையில் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் போது திடீர்ன்னு ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்க குடையை எடுத்து கொண்டு கார்த்திக் நடந்தே வருகிறான். 

பல்லவியை கண்டுபிடித்த கார்த்தி

ஆசிரமத்தில் தீபா பாட்டு பாடி கொண்டிருக்க கார்த்திக்கும் அங்கு வந்து விட குரலை கேட்டு பல்லவி தான் என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே வந்து பார்க்க பாடுவது தீபா என தெரிந்து அதிர்கிறான். நாம ரசித்த குரலுக்கு சொந்தக்காரி தனது மனைவி தான் என்பது அறிந்து சந்தோஷப்படுகிறான். 

பாடி முடித்து தீபா வீட்டிற்கு கிளம்ப,  அவளிடம் நாம இங்கே வந்த விஷயம் தெரிய கூடாது என கார்த்திக் மறைந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News