மாமியாருக்கு எதிராக சாட்சி சொல்வாரா வானதி? 'பேரன்பு' சீரியலில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்!

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பேரன்பு மெகா சீரியலில் அடுத்தடுத்து அசர வைக்கும் காட்சிகளுடன் நகர்கிறது.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 21, 2022, 03:20 PM IST
  • பேரன்பு சீரியலில் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
  • வானதியை புரிந்து கொள்வாரா கார்த்தி?
  • வெளிச்சத்திற்கு வருமா அமுதாவின் சூழ்ச்சி?
மாமியாருக்கு எதிராக சாட்சி சொல்வாரா வானதி? 'பேரன்பு' சீரியலில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்! title=

அமுதா எப்படியாவது தனது மகளை ராஜராஜேஸ்வரியின் மருமகளாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தால் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்து ராஜராஜேஸ்வரியின் இரண்டாவது மகனுக்கு கட்டி வைத்து விடுகிறாள். அமுதாவின் சூழ்ச்சி அறிந்து வானதியிடம் திருமணத்தை நிறுத்த சொல்லியும் வானதி எதுவும் செய்யாததால் குடும்பத்தோடு அனைவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினான் கார்த்தி.

மீண்டும் வீட்டுக்குள் செல்ல, அமுதா தனது மகள்களை கூட்டிக் கொண்டு ராஜராஜேஸ்வரி கட்டுமான நிறுவன வேலை நடக்கும் இடத்துக்கு வேலைக்கு அழைத்து செல்கிறார். ‌தனது மருமகள் சித்தாள் வேலை செய்வதை பார்த்து எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் ராஜராஜேஸ்வரி எல்லாருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்து அதன் மூலம் மறைமுகமாக மருமகளை சாப்பிட வைத்து அழகு பார்க்கிறாள். 

மேலும் படிக்க | ஷங்கர் படத்துக்கு ரூ.1000 அட்வான்ஸ் வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கார்த்தி அமுதாவையும் லட்சுமியையும் பார்த்து வெயிலில் வேலை கொடுக்க சொல்கிறார். இதனால் இன்னும் கடுப்பான அமுதா, வானதி பெயரில் கொடுத்த போலி வரதட்சணை கேஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் சமயம் வானதியை ராஜராஜேஸ்வரிக்கு எதிராக சாட்சி கூற தயார் செய்கிறாள். கோர்ட்டில் விசாரணையின் போது வானதி சொல்லப் போகும் பதில் என்ன? அமுதாவின் சூழ்ச்சி வெளிச்சத்துக்கு வருமா? வானதியை புரிந்து கொள்வாரா கார்த்தி?

இப்படியான பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையில் அவிறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாக உள்ள பேரன்பு சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News