வடசென்னை ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் கென் கருணாஸ்!

தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் வரும் ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது தோற்றத்தில் நடிக்க உள்ளார் கென் கருணாஸ்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 06:14 PM IST
வடசென்னை ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் கென் கருணாஸ்!  title=

பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்து வடசென்னை என்ற படத்தை எடுத்தனர்.  2018 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் திரையரங்கில் வெளியானது.  தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.  வடசென்னை பகுதியில் நடக்கும் கதைக்களமாக இப்படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.  மிக நீண்ட கதையாக இருப்பதால் இதனை இரண்டு பாகமாக வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன்.

முதல் பாகம் வெளிவந்து நீண்ட நாட்களாகியும் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வராமல் இருந்தது.  அதன்பின் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் என்ற படத்தை இயக்கினார்.  அந்தப்படமும் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.   வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.  அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்று கூறிய வெற்றிமாறன், வடசென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரமான ராஜனை வைத்து வெப்சீரிஸ் எடுக்கவுள்ளதாக கூறியிருந்தார். 

rajan

தற்போது அசுரன் படத்தில் தனுஷின் இரண்டாவது பயனாக நடித்த கென் கருணாசை வைத்து ராஜனின் சிறுவயது கதாபாத்திரமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்.  15 வயது முதல் 24 வயது வரை உள்ள ராஜனின் கதையை கென் கருணாசை வைத்து வைத்து எடுக்க உள்ளனர்.  இதற்காக கென் கருணாஸ்க்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  சமீபத்தில் கென் கருணாஸ் நடித்த ஆல்பம் சாங் ஒன்று யூ டியூப்பில் வெளியானது.

ALSO READ முன்னணி இயக்குனர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய தயாரிப்பு நிறுவனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQY

Trending News