Pulimada Teaser: புலியும் பட்டாம்பூச்சியும்... வந்தது புலிமடா அப்டேட் - ரசிகர்களை கவர்ந்த டீசர்!

Pulimada Teaser: ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் 'புலிமடா' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 19, 2023, 02:30 PM IST
  • இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
  • படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • இப்படத்தில் லிஜோமோல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
Pulimada Teaser: புலியும் பட்டாம்பூச்சியும்... வந்தது புலிமடா அப்டேட் - ரசிகர்களை கவர்ந்த டீசர்! title=

Pulimada Teaser: ஏ.கே.சாஜன் - ஜோஜு ஜார்ஜ் இணையில் உருவாகும் புலிமாடா படத்தின் அதிகாரபூர்வ டீசர் ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனின் தலைப்பைக் கொண்டு வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமாடாவின் டீசரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். 

படத்தின் டீசரில் குறிப்பிட்டு சொல்லும்படி சில விஷயங்கள் உள்ளன, அதனால் டீஸர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. ஒருவேளை ஜோஜுவின் நடிப்பு திறமை மீண்டும் ஒருமுறை புலிமடா படத்தில் நிரூபணமாகும். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, அதாவது தற்போதே பார்வையாளர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெண்ணின் சுகந்தம் (ஒரு பெண்ணின் வாசனை) என்பது படத்தின் டேக் லைனாக உள்ளது. பான் இந்தியன் அளவில் வெளிவர இருக்கும் புலிமடா திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜின் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோமோல் ஆகியோர் நடிக்கின்றனர். 

மேலும் படிக்க | 500 கோடியை நெருங்கும் ஜெயிலர்..! முழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதான்..!

மலையாளத்தில் எக்கச்சக்கமாக பல்வேறு நல்ல திரைப்படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தின் எழுத்தாளர்-இயக்குனர்-எடிட்டர் என மூன்று அவதாரங்களை எடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். 

இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜுவின் படங்களை ஐன்ஸ்டீன் மீடியா ஆண்டனி தயாரித்துள்ளார். பிளாக்பஸ்டர் "இரட்டா" திரைப்படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜின் அடுத்த வெளியீடான "புலிமடா" திரைப்படம் உள்ளது. இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே மூச்சில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படமாக புலிமடா உருவெடுத்துள்ளது.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிம படத்தில் லிஜோமோளும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் பாலச்சந்திர மேனன், செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிளான வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) என்ற கதாபாத்திரத்தின் திருமணமும் அது தொடர்பான நிகழ்வுகளும் அது கொண்டு வரும் மாற்றங்களும் புலிமடாவின் கதைக்களம் என தெரிவிக்கப்படுகிறது. புலிமடா மூலம் அவரது கதாபாத்திரமும் வாழ்க்கையும் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் என படக்குழு தெரிவிக்கிறது. தலைப்பிற்கு ஏற்றாற்போல், ஒரு உண்மையான புலியின் குகை வழியாக பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார் இயக்குனர்.

பிற கலைஞர்கள்

இப்படத்திற்கான பாடல்களுக்கு இஷான் தேவ் இசையமைக்க, பாடல் வரிகளை ரபிக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், மைக்கேல் பனச்சிகல் ஆகியோர் எழுதியுள்ளனர். பின்னணி இசையை அனில் ஜான்சன் கவனித்துக்கொண்டுள்ளார். படத்தொகுப்பாளராக ஏ.கே.சாஜன், தயாரிப்பு வடிவமைப்பாளராக வினேஷ் வங்காளன், கலை இயக்கத்தில் ஜித்து செபாஸ்டியன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஒப்பனையில் ஷாஜி புல்பள்ளி, ஆடை வடிவமைப்பு சுனில் ரஹ்மான் மற்றும் ஸ்டெஃபி சேவியர்,  தலைமை இணை இயக்குனராக ஹரிஷ் தெக்கேபட், படத்தின் ஸ்டில்ஸ் பொறுப்பை அனூப் சாக்கோ, வடிவமைப்புகள் மற்றும் சந்தைப்படுத்தலை ஒப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட் ஓல்ட்மங்க்ஸ், விநியோகத்தை ஆன் மெகா மீடியா உள்ளிட்டோர் கவனித்துக்கொள்கின்றனர். 

மேலும் படிக்க | “ரஜினியை விட விஜய்தான் பெரிய ஆள்..” பிரபல நடிகர் கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News