கலைஞர் 100: என்ட்ரி கொடுத்த ரஜினி... காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய தனுஷ்!

Kalaingar 100 Updates: சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ், ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2024, 09:12 PM IST
  • சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
  • கமல், விஜய் ஆகியோர் இன்னும் வருகை தரவில்லை.
  • நூற்றுக்கணக்கான திரை நட்சத்திரங்கள் இதில் வருகை தந்துள்ளனர்.
கலைஞர் 100: என்ட்ரி கொடுத்த ரஜினி... காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய தனுஷ்! title=

Kalaingar 100 Updates: 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என திரையுலகமே இதில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்து விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோன்ற பல பேருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

ரஜினி என்ட்ரி: வைரலாகும் வீடியோ

இந்நிலையில், நிகழ்வுக்கு பல நட்சத்திரங்கள் வருகை தந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 7.30 மணியளவில் வருகை தந்தார். பின்னர், அவர் இருக்கையில் அமர்ந்திருந்த போது வருகை தந்த நடிகர் தனுஷ் ரஜினியை நோக்கி வந்து, மேடையின் முன் அவரின் காலில் விழுந்து வணங்கினார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கோவை லோகநாதன்

இந்நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். குறிப்பாக, கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அமீர், லைகா சுபாஸ்கரன், கே.எஸ். ரவிக்குமார், வெங்கட் பிரபு, பிரியங்கா மோகன், நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, யோகி பாபு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் தற்போது வருகை தந்துள்ளனர். அழைப்பிதழ் அளிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் இதுவரை வருகை தரவில்லை. 

இதில் எல்லா நிகழ்விலும் ஒன்றாக அமர்ந்திருக்கும் ரஜினியினும், கமல்ஹாசனும் இதில் அருகருகே அமரவில்லை. வெள்ளை சட்டையில் வந்திருக்கும் ரஜினியும் மற்றும் கருப்பு நிற சட்டையில் கமல்ஹாசனும் வருகை தந்துள்ளனர். இவருவருக்கும் இடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்துள்ளார். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். இதில் தனுஷ், சூர்யா போன்றோர் மேடையில் பேசி உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, கமல் ஆகியோரும் மேடையில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு... வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் - முழு பின்னணி இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News