சந்திரமுகி 2 படத்தில் அதிக சம்பளம் பெற்ற பிரபலம் யார்..? இதோ முழு விவரம்..!

Chandramukhi 2 Cast and Crew Salary Details: பி.வாசு இயக்கத்தில தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Sep 28, 2023, 04:12 PM IST
  • சந்திரமுகி 2 திரைப்படத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையன் ராஜா கதாப்பாத்திரத்தில் வருகிறார்.
  • சந்திரமுகி 2 படத்தில் அதிகம் சம்பளம் வாங்கியது யார் தெரியுமா..?
சந்திரமுகி 2 படத்தில் அதிக சம்பளம் பெற்ற பிரபலம் யார்..? இதோ முழு விவரம்..! title=

2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் பாகம், கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர் கதை போல உருவாகியுள்ள இந்த படத்தில், வடிவேலுவின் முருகேசன் கதாப்பாத்திரத்தை தவிர வேறு எந்த பழைய கதாப்பாத்திரமும் இல்லை. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லக்ஷமி மேனன், ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சந்திரமுகி 2 படத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலம் யார் தெரியுமா..? 

கங்கனா ரனாவத்:

உலகம் முழுவதும் பிரபலமான பாலிவுட் நாயகிகளுள் ஒருவர், கங்கனா ரனாவத். இவர் தமிழில் ‘தாம் தூம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தி திரையுலகில் மட்டுமன்றி, சினிமாவில் பொதுவாக நடக்கும் அரசியலிலும் தலையிட்டு தனது கருத்துகளை கூறுவது இவரது வழக்கம். அவ்வப்போது பொது அரசியலும் பேசுவார். இந்திய திரையுலகின் தைரியமான நாயகிகளுள் ஒருவர் கங்கனா என பலரால் பாராட்டப்படுகிறார். இவர், சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி கதாப்பாத்திரமாகவே நடித்துள்ளார். சொல்லப்போனால், இந்த படத்தில் ராகவா லாரன்ஸை விட இவருக்குத்தான் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்காக இவர், 20 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறாராம். படத்தில் நடித்துள்ள மொத்த நடிகர் நடிகைகளிலேயே அதிக தொகையை சம்பளமாக பெற்றுள்ளவர் இவர்தான் என்று கூறப்படுகிறது. 

Kangana Ranaut

ராகவா லாரன்ஸ்:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடன இயக்குநராக இருந்து பின்பு நடிகராக மாறிய நடிகர், ராகவா லாரன்ஸ். பேய் படங்களுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. காரணம், இவர் இயக்கிய முனி திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அதிலிருந்து இவர் தொடர்ச்சியாக பேய் படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். மக்களுக்கு அந்த படங்கள் பிடித்தும் உள்ளது. பி.வாசு இயக்கியுள்ள சந்திரமுகி 2 பேய் படத்திலும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இதற்காக இவர் வாங்கிய சம்பளம், 15 கோடியாம். 

வடிவேலு:

காமெடி கதாப்பாத்திரங்கள் மட்டுமன்றி, சமீப காலமாக குணச்சித்திர வேடத்திலும் கலக்கி வருபவர், வடிவேலு. 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் முருகேசன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 படத்திலும் அதே கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர், 2 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

ஸ்ருஷ்டி டாங்கே:

சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலருக்கு பரிச்சயமான முகமாக மாறியவர், ஸ்ருஷ்டி டாங்கே. இவரை ரசிகர்கள் பலர் கண்ணக்குழி அழகி என்றும் அழைப்பதுண்டு. டார்லிங், எனக்குள் ஒருவன், மேகா, ஜித்தன் 2 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். சந்திரமுகி 2 படத்திற்காக இவருக்கு 30 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. 

மகிமா நம்பியார்:

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருபவர், மகிமா நம்பியார். தமிழில், ‘சாட்டை’ படம் மூலம் அறிமுகமானார். கோலிவுட்டின் வளர்ந்து வரும் நாயகிகளுள் இவரும் ஒருவர். இவரும் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இவருக்கு 25 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

லக்ஷமி மேனன்:

தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பிடித்த கதாநாயகியாக இருந்தவர், லக்ஷமி மேனன். விஷால், சசிகுமார், விக்ரம் பிரபு என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார். இவருக்கு சந்திரமுகி 2 திரைப்படம் கம்-பேக் ஆக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க இவர், 27 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | சந்திரமுகி2, இறைவன், சித்தா-மூன்றில் எந்த படம் பெஸ்ட்..? எதை முதலில் பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News