Anitha Sampath Divorce: கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்; உண்மை என்ன

பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனிதா சம்பத்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 09:56 AM IST
Anitha Sampath Divorce: கணவரை விவாகரத்து செய்கிறாரா அனிதா சம்பத்; உண்மை என்ன title=

ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத். இவர் கடந்த ஆண்டு மற்றொரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தனது செய்தி வாசிப்பு வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார்.

பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் எப்போதும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி மக்களின் ஆதரவையும் பெற்றார். நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு (Anitha Sampath) அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், மீண்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். 

ALSO READ | இதுதான் அர்ச்சனாவின் தற்போதைய நிலை; மகள் வெளியிட்ட போஸ்ட்

பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அது என்னவென்றால் அனிதா சம்பத் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வெளியானது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து, அனிதா சம்பத் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

கண்டன்ட் இல்லை என்று இப்படி பண்றாங்க, டெய்லி யூட்யூப்ல ஒன்னா விலாக் போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல என தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் விவாகரத்து செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

ALSO READ | நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News