விரைவில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2022, 05:37 PM IST
  • பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
  • எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டது.
  • கேஜிஎப் 2 படம் ஹிட் ஆனதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
விரைவில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்?  title=

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்தார்.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே இதன் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.  டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது, காரணம் டாக்டர் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.  

மேலும் படிக்க | KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு

மேலும் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்தது.  எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது.  இதுவரை இல்லாத அளவிற்கு பீஸ்ட் ட்ரைலர் படத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.  10 ஆண்டுகளாக எந்த படத்திற்கும் நேர்காணல் அளிக்காத விஜய் இந்த படத்திற்கு கொடுத்திருந்தார், இதுபோல் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக பல விஷயங்கள் நடந்தன.

அதிக எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.  விஜய் ரசிகர்களிடம் இருந்து இரண்டு விதமான விமர்சனங்கள் கிடைத்தன.  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே பீஸ்ட் படத்திற்கு கிடைத்த, அதிக படியான விமர்சனமாக இருந்தது.  இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அளித்த ஒரு பேட்டியில்,  பீஸ்ட் படத்தின் கதைக் களத்தில் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். வீரராகவன் கதாபாத்திரமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருந்தது, விஜய் சம்மதித்தால் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

nelson

மேலும் படிக்க | பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News