சிங்கிள் சிங்கமாக உலா வரும் அனுஷ்கா! முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Anushka Shetty Net Worth: நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 29, 2024, 12:06 PM IST
  • அனுஷ்கா கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்தார்.
  • இவரது முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
  • இவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சிங்கிள் சிங்கமாக உலா வரும் அனுஷ்கா! முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?  title=

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமன்றி இந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், அனுஷ்கா ஷெட்டி. 42 வயதானாலும் இன்றளவும் சிங்கிள் சிங்கமாக வலம் வரும் இவர், பணக்கார நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருக்கிறார். 

அனுஷ்கா ஷெட்டி:

அனுஷ்காவின் இயற்பெயர், ஸ்வீட்டி. சினிமாவிற்ககா அனுஷ்கா என்று இவரது பெயரை மாற்றினார். தமிழில் அனுஷ்கா முதன் முதலாக நடித்த படம், 2006ஆம் ஆண்டு வெளியான ரெண்டு படமாகும். இதில் அவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகியாக வந்ததால் பெரிதாக அப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இதையடுத்து, 2009ஆம் ஆண்டு வெளியான படம், அருந்ததி. இந்த படத்தில் ஜக்கம்மாவாகவும், அருந்ததியாகவும் கம்பீரமான கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். 

தொடர்ந்து  வேட்டைக்காரன், சிங்கம், சகுனி, தாண்டவம், சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்கள் இன்னும் இவரது ரசிகர்கள் பட்டாளத்தை உயர்த்தியது. எக்பரிமெண்டல் ஃபிலிம் எனக்கூறப்படும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை கூட்டி நடித்தார் அனுஷ்கா. இப்படத்திற்காக 20 கிலோ ஏற்றி நடித்த இவர், அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் இருந்தார். பின்பு இவருக்கு கிடைத்த பாகுபலி1 மற்றும் பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் ஹிட் அடித்தது. 

அனுஷ்காவின் சம்பளம்!

தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளுள், முதன்மையானவராக இருப்பவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கி வந்த இவர், பின்னர் லட்சங்களில் வாங்க ஆரம்பித்தார். சில படங்களுக்கு பின்னரே கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்த அனுஷ்கா, கடைசியாக ‘மிஸ்.ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ எனும் படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்காக இவர், ரூ.6 முதல் 8 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

மொத்த சொத்து மதிப்பு:

அனுஷ்கா ஷெட்டி, இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து விடுவார் என கூறப்படுகிறது. இதையடுத்து, இவரது முழு சொத்து மதிப்பு ரூ.130 கோடி வரை உள்ளதாக கூறப்படுகிறது. விளம்பர தூதுவராக இருக்க, இவர் ரூ.12 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. விலை உயர்ந்த கார்கள், ஐதராபாத்தில் சொந்தமாக பெரிய அளவில் பங்களா வீடு என இன்னும் பல அசையும் சொத்துக்களையும் அனுஷ்கா வைத்துள்ளார். இதையெல்லாம் சேர்த்து, ரூ.130 கோடி வரை வரும் என்றும் கூறப்படுகிறது. 

திருமணம் எப்போது? 

ரசிகர்கள் அனைவருக்கும் அனுஷ்கா எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் அவரோ இப்போது வரை அது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். அனுஷ்காவும் பிரபாஸும் காதலித்து வருவதாகவும், இவர்களுக்கு இந்த ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | ரச்சிதாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் தகவல்…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News