சமீபத்தில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படம் 'ரைட்டர்'. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா, சுப்ரமணியம் சிவா, ஜி.எம்.சுந்தர், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு அப்பாவி ph.d பயிலும் மாணவனை தேவையற்ற வீண் பழியிலிருந்து விடுவிக்க போராடும் ஒரு ஹெட் கான்ஸ்டபிளின் கதை தான் இப்படத்தின் கரு. நல்ல விதமான கருத்தை மக்களுக்கு எடுத்துரைத்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப்புடன், விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித் குமார் கூட்டணி அமைந்திருப்பதாக அத்தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கப்போகும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'துக்ளக் தர்பார்' படத்தை தயாரித்தது. மேலும் விக்ரம் நடிக்கும் 'மகான்' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது.
After @officialneelam's #Writer,
We are extremely happy to sign the most talented director @frankjacobbbb for our next @beemji @valentino_suren @proyuvraaj pic.twitter.com/ZauOhKuKPe— Seven Screen Studio (@7screenstudio) December 29, 2021
மேலும் ரைட்டர் படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது. பின்னர் மாரி செல்வராஜ், எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷை வைத்து இயக்கிய 'கர்ணன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு சிறந்த இயக்குனர்களை உருவாக்கும் ஒரு பட்டறையாக பா.ரஞ்சித் திகழ்கிறார்.
ALSO READ | குக் வித் கோமாளி-3 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது !
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR