Alcohol Research: போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம்

மது அருந்தும்போது ஏன் ஆங்கிலம் பேச ஆரம்பிக்கிறார்கள்? ஆச்சரியம் தரும் அறிவியல் காரணம் தெரியுமா? இந்த குண மாறுதலுக்கு பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 08:19 PM IST
  • மது அருந்திய பிறகு நம்பிக்கை அதிகரிக்கும்
  • மது அருந்தியவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்கள்
  • ஆராய்ச்சியில் ஆளுமை குறித்த பெரிய வெளிப்பாடு
Alcohol Research: போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம் title=

புதுடெல்லி: சிலர் மது அருந்திய பின்னர் திடீரென ஆங்கிலத்தில் பேசத் தொடங்குவதை நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். அவர்கள் முழு நம்பிக்கையுடன் அச்சமின்றி ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஆங்கிலத்திலும் பதிலளிக்க விரும்புகிறார்கள்.

ஆனால், அது அவர்களது இயல்பான குணாதிசயமாக இருக்காது. இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. இந்த கேள்விக்கான பதில் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்துள்ளது.  

போதைப்பொருளை எடுத்துக் கொண்டால் நம்பிக்கை அதிகரிக்கிறது
'ஜர்னல் ஆஃப் சைக்கோஃபார்மகாலஜி' ('Journal of Psychopharmacology') என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 1-2 பெக் ஆல்கஹால் எடுத்துக் கொண்ட பிறகு சிலரின் பதட்டம் குறைந்துவிடுகிறது. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து பிற மொழியில் பேசத் தொடங்குகிறார்கள்.

Also Read | Honey-Trap: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்ட ஜவான் கைது 

வழக்கமாக அந்த மொழியில் பேச அவர்களுக்கு தயக்கம் இருந்திருக்கும். இந்தியாவைப் பொருத்த வரையில் மது அருந்திய பலரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள்.

ஆளுமையில் மாற்றம் 
இந்த ஆராய்ச்சியின் படி, ஆல்கஹால் குடிப்பது மக்களின் நினைவகத்தையும் (Concentration Power) செறிவு சக்தியையும் பாதிக்கிறது. இந்த நேரத்தில், சிலரின் ஆளுமை (Personality) முற்றிலும் மாறுகிறது மற்றும் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இது நடந்தவுடன், அவர்களின் ஆழ்மனது இதுவரை நம்பிக்கை குறைவாக இருந்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. அவர்கள் தங்கள் உணர்வுடன் இருக்கும்போது செய்யத் தயங்குபவற்றை, குடிபோதையில் அச்சமின்றி செய்கிறார்கள்.

Also Read | தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் நடனப்புயல் பிரபுதேவா 

ஒருவர் பாடலாம், மற்றொருவர் ஆடலாம்   

வேறொரு மொழியைப் பேசுவதைத் தவிர, மது அருந்திய பிறகு வேறு விஷயங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். சாதாரண நேரத்தில் நடனம் ஆடுவது அல்லது பாடவோ தயங்கும் மக்கள், மது அருந்திய பிறகு, அதிக நம்பிக்கையுடன் அதை செய்கின்றனர். தயக்கத்தை உடைத்தெறிந்து மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்கிறார்கள்.  

இனிமேல் யாராவது மது அருந்திய பிறகு ஆங்கிலம் பேசினாலோ அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்தாலோ அவரை கேலியும், கிண்டலும் செய்யவேண்டாம். பாவம் அது அவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கான உளவியல் ரீதியிலான செயல்பாடுகள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.  

Also Read | சஞ்சனாவுக்கு மூன்று முடிச்சிட்டு திருமண பந்தத்தில் இணைந்தார் Jasprit Bumrah

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News