இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஆதார் அட்டை அங்கீகாரம் தொடர்பான ஒரு முக்கிய செய்தியினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஆதார் அட்டைக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர் குறிப்பிட்ட குடியிருப்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் அவசியம் என்று தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கு முன், நிறுவனங்கள் குடியிருப்பாளர்களின் ஒப்புதலை காகிதத்தில் அல்லது மின்னணு முறையில் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. யூஐடிஏஐ ஆனது நிறுவனங்களுக்கு இதுகுறித்த வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, சேகரிக்கப்படும் தரவு வகை மற்றும் ஆதார் அங்கீகாரத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்வதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
மேலும் படிக்க | வங்கி லாக்கர் ஒப்பந்தம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!
இந்த குறிப்பிட்ட அங்கீகாரங்களின் பதிவுகள் ஆதார் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்கப்படும் என்றும் ஆதார் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளின்படி, காலாவதி தேதி முடிந்தவுடன் இந்தத் தகவல்கள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆர்இ-க்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை மறைக்காமல் அல்லது அதில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளாமல் ஆதாரை உடல் அல்லது மின்னணு வடிவில் சேமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரம் இருந்தால் மட்டுமே ஆர்இ-க்கள் ஆதார் எண்ணை சேமித்து வைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.
ஆர்இ நிறுவனங்கள் குடியிருப்பாளர்களுக்கு ஆதார் அங்கீகார சேவைகளை வழங்குகின்றன. அந்த நிறுவனங்கள் ஆதார் எண் மற்றும் மக்கள்தொகை/பயோமெட்ரிக் ஓடிபி தகவலை அங்கீகாரத்திற்காக சமர்பிக்கின்றனர். இதுதவிர ஆர்இ நிறுவனங்கள் மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் ஆதார் எண்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை குறித்து அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த செயல்முறையில் ஏதேனும் ஆள்மாறாட்டம் அல்லது மோசடி போன்ற ஏதேனும் விஷயங்கள் நடந்தால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் ஆர்இகள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இவர்கள் ஆதார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்! ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ