திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி (Thiruchendur subramaniya swamy temple) கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கு முன் உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரிலுள்ள (Mayilapur) கபாலீசுவரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 47 பெரிய கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் (Annai Tamil) அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் இந்த கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை ஒன்றும் வைக்கப்பட்டது.
ALSO READ | அன்னைத் தமிழில் அர்ச்சனை: கோயில்களில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை
அதில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் நேற்று எண்ணற்ற பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து முருகனை தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழக அரசு கடற்கரை சுற்றுலா, தலங்களுக்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கியுள்ளதால் ஏராளமானோர் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்தனர்.
மேலும் நாழிக் கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராடினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி அதிகமானோர் நாழிக் கிணற்றில் புனித நீராடியதால் பக்தர்களுக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஆனால் கடற்கரையில் குளிப்பதற்கான அனுமதி தொடர்கிறது.!
Also Read | சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR