கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நகரீஸ்வரர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பெங்களூருவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் நன்கொடை பணத்தை எண்ணும் போது இரண்டு பேர் அதனை திருடும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் முத்தையாபுரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
Krishna jayanthi Celebrations : விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர், மதுராவின் இளவரசி தேவகி மற்றும் அவரது கணவர் வசுதேவரின் எட்டாவது குழந்தையாக பிறந்து, கோகுலத்தில் நந்தகோபர்-யசோதாவின் மகனாக வளர்ந்தவர்....
கோவில்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நேற்று பழனியில் துவங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் இந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் விடுமுறை என்பதாலும், சனி - ஞாயிறு - திங்கள் என மூன்று நாள் விடுமுறை பயன்படுத்தி இந்த இடங்களுக்கு நீங்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏதுவாக இருக்கும்.
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் இரு பிரிவினரிடையேயான சாதிய மோதலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் இடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இரு சமூகத்தினர் முன்னிலையில், கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
Pradosham Worship : பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் தான் வரும். ஆனால் குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருகிறது. இந்த அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்...
Richest Temples Of India : ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் காணிக்கைகளும், கொடுக்கும் நன்கொடைகளும் மிக அதிகமானவை... அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்!
Kamakya Sakthi Peet : அஸ்ஸாம் மாநிலம் கெளஹாதி நகரில் உள்ள நீலாஞ்சல் மலையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள்... அன்னை வழிபாட்டில் முக்கியமான தலம்...
சென்னை மாதவரம் அசிஸ் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அதிகாரிகள்அகற்ற வந்ததால் பதற்றமான சூழல் நிலவுயது. கோயிலை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.