முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த விழா தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தைப்பூசம் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
தைப்பூசத்தின் சிறப்புகள்:-
> தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.
> சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
> தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
தைப்பூச விரத முறை:-
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு வழங்ககப்படும்.