மகா சிவராத்திரி: இன்று உருவாகும் பஞ்சகிரகி யோகத்தால் அமோகமான பலன்கள் கிடைக்கும்

Mahasivratri 2022: மகர ராசியில் செவ்வாய், சனி, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சேர்வதால் உருவாகும் பஞ்சகிரஹி யோகம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, கௌரவம், ஆகியவற்றை அதிகரிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2022, 02:27 PM IST
  • ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால், அது பஞ்சகிரஹி யோகம் எனப்படும்.
  • இம்முறை மகர ராசியில் செவ்வாய், சனி, புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  • 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது.
மகா சிவராத்திரி: இன்று உருவாகும் பஞ்சகிரகி யோகத்தால் அமோகமான பலன்கள் கிடைக்கும் title=

மகா சிவராத்திரி 2022: இன்று உலகம் முழுவதும் உள்ள சிவபக்தர்களால் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பம்சம் வாய்ந்த நாளில், மகர ராசியில் ஐந்து கிரகங்களின் சுப சேர்க்கை உருவாகிறது. ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, பொதுவாக பஞ்சகிரஹி யோகங்கள் மங்களகரமானவையாக இருக்கும். எனினும், சில சமயம் இவை எதிர்மறையான விளைவுகளையும் அளிக்கின்றன. 

மகர ராசியில் செவ்வாய், சனி, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சேர்வதால் உருவாகும் பஞ்சகிரஹி யோகம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, கௌரவம், ஆகியவற்றை அதிகரிக்கும். இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் மக்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

120 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ஐந்து கிரகங்களின் மகா சங்கமம் 

வேத ஜோதிட சாஸ்திரப்படி, ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால், அது பஞ்சகிரஹி யோகம் எனப்படும். இம்முறை மகர ராசியில் செவ்வாய், சனி, புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது. இது சிவ பக்தர்களுக்கு மிக அதிக பலன்களை அளிக்கும்.

இந்த நான்கு ஐஸ்வர்ய யோகங்களிலும் சிவனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்

1: சர்வார்த்த சித்தி யோகம்:

மகாசிவராத்திரி அன்று சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் குறிப்பாக நல்ல பலன்களை அளிக்கும். இதன் மூலம் விரும்பிய ஆசைகள் நிறைவேறும். இந்த யோகத்தில் ஒரு புதிய வேலையை தொடங்கினால், அப்போது நேரம் காலம் எல்லாம் பார்க்க வேண்டாம் என கூறப்படுகிறது, இந்த யோகமே மிக நல்ல நேரமாக பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் கோள்களின் அற்புத சங்கமம்! சிவ பூஜை செய்யும் முகூர்த்தம்

2. கேதார யோகம்: 
ஒரு ராசியில் ஐந்து கிரகங்கள் இருப்பதால், சிவ வழிபாட்டிற்கு மிகவும் நல்லது என்று கருதப்படும் கேதார யோகமும் உருவாகி வருகிறது. கேதார யோகத்தில் செய்யப்படும் வழிபாடு வாழ்வில் செல்வத்தையும் பண வரவையும் மேம்படுத்துகிறது.

3. பரிக் யோகம்: 

மகாசிவராத்திரி அன்று பகல் 11.18 வரை பரிக் யோகம் இருக்கும். இந்த யோகத்தில் சிவபெருமானை வழிபட்டால், எதிரிகளை வெல்ல அபரிமிதமான பலன் கிடைக்கும். இந்த யோகத்தில் மகாதேவனை வழிபடுவதன் மூலம், நமது அனைத்து தடைப்பட்ட வேலைகளும் வெற்றிகரமாக முடியும்.

4. சிவயோகம்: 

மார்ச் 1, 2022 அன்று காலை 11.18 மணி முதல் மார்ச் 02, 2022 காலை 08.21 வரை கன்னி மற்றும் ரிஷப ராசியில் சிவயோகம் உருவாகிறது. எந்த விதமான சுப காரியங்களையும் செய்வதற்கு சிவயோகம் சிறந்த யோகமாக கருதப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News