மதுரை: புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி அருணகிரிநாத சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 77. சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்.
மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் மீது அன்பும் பெரும் மதிப்பும் கொண்ட
திருக்குர்ஆனில் முதல் சூராவான அல்ஹம்து சூராவை அர்த்தத்துடன் ஓதுபவர்
பெருமானார் நபி (ஸல்) மீது பெரும் மதிப்பு உடையவர்#மதுரை_ஆதீனம் #உடல்நலக்குறைவால்_காலமானார்#MaduraiAdheenam
ஆழ்ந்த இரங்கல் ஐயா pic.twitter.com/aMJ55SFx8n— திண்டுக்கல் அலாவுதீன் (@AlaudeenSyed7) August 13, 2021
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நேற்று மருத்துவமனைக்கு சென்று அருணகிரிநாத சுவாமிகளின் உடல்நலனை விசாரித்தார்.
அப்போது, மதுரை மடாதிபதி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டதன்படி, மதுரை ஆதீனத்தின் முக்கிய அறைகளை பூட்டி சீல் வைத்தார்.
மதுரை ஆதீனம் சித்தி அடைந்தால், அவருக்காக எழுப்பப்படும் குரு முகூர்த்த இடம் குறித்தும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையில், மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதரால் அடுத்த வாரிசு என்று ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நித்தியானந்தா, தானே அடுத்த மடாதிபதி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், மதுரை ஆதீனத்தின் சில அறைகள் பூட்டப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இது வழக்கமான நடைமுறை தான் என்றும் சொல்லப்படுகிறது.
Also Read | மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துள்ள நித்யானந்தா..!!
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இதுவரை மொத்தம் 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர்.
திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இறுவரை மொத்தம் 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர்.
ALSO READ | நித்யானந்தாவின் அடுத்த அதிரடி, கைலாசாவில் 3 நாட்கள்: விசா, உணவு, இருப்பிடம் all free
தற்போதைய மடாதிபதி அருணகிரிநாதர், சில ஆண்டுகளுக்கு முன்னதாக நித்யானந்தா என்பவரை இளைய பீடாதிபதியாக அறிவித்தார். இதனால் மதுரை ஆதீனம் சர்ச்சைகளுக்குள் சிக்கியது. அடுத்த மடாதிபதியை தேர்வு செய்வதில் தமக்கு முழு உரிமை உண்டு இதில் எவரும் தலையிட முடியாது என்று 292வது மடாதிபதி அருணகிரி தெரிவித்தார்.
இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகு அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் தானே 293 வது மடாதிபதி என்பதில் உறுதியாக இருக்கிறார் நித்தியானந்தா...
மதுரை ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாகவும் நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | இந்திய பக்தர்களுக்கு கைலாசாவில் No Entry, நித்தியானந்தா தடாலடி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR