தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் என அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
ராஜ்யசபாவில் நேற்று பேசிய அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீத கிருஷ்ணன்,
மாண்புமிகு பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறி தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். முதல்வர் என்பதற்கு பதில் பிரதமர் என்று அவர் கூறிவிட்டார்.
இதையடுத்து அவை உறுப்பினர்கள், முதல்வர் என்று அவரை திருத்தினார்கள். பின் அவர் முதல்வர் என்று மாற்றி கூறினார். அவரது பேச்சால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது மேலும் அவர் தவறாக பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
இவர் ஏற்கனவே பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் பாடி புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.