LIC Policy: உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து ஒளிமயமாக்கும் 5 சிறந்த காப்பீட்டுத் திட்டங்கள்!!

குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2020, 02:04 PM IST
  • சேமிப்பு மற்றும் முதலீடு கடினமான காலங்களில் நமக்கு உதவுகின்றன.
  • குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
  • ஆன்லைன் திட்டமான டெக் டர்ம் பிளான், ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானது.
LIC Policy: உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து ஒளிமயமாக்கும் 5 சிறந்த காப்பீட்டுத் திட்டங்கள்!! title=

வழக்கமாக, சேமிப்பு என்று வரும்போது, ​​பெரும்பாலானோர் அரசாங்க திட்டங்கள் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நிச்சயமாக, சேமிப்பு மற்றும் முதலீடு கடினமான காலங்களில் நமக்கு உதவுகின்றன.  குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் (LIC Policy) பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. எதிர்காலத்தில் உங்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கக்கூடிய எல்.ஐ.சியின் அப்படிப்படட் சில திட்டங்களைப் பற்றி காணலாம்.  

1. Jeevan Amar Plan

ஜீவன் அமர் திட்டம் (Jeevan Amar Plan) -  LIC -ன் ஜீவன் அமர் திட்டம் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கானது. பாலிசியின் மச்சூரிட்டி வயது அதிகபட்சம் 80 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி வாடிக்கையாளருக்கு மரணம் வரை ஆயுள் பாதுகாப்பு அளிக்கிறது. பாலிசி காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் ஆகும். புகைபிடிப்பவர்களும் இந்த பாலிசியில் கவர் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், புகைப்பிடிப்பவர்களின் பிரீமியம் அளவு அதிகமாகும். பிரீமியம் ஆண்களை விட பெண்களுக்கு சற்று குறைவாக உள்ளது. இதில் அதிக தொகையை காப்பீடு செய்ய விரும்பும் நபர்களுக்கும் அதில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்கு 1 கோடி ரூபாய் தொகையில் 20% வரை தள்ளுபடி கிடைக்கும்.

2. Jeevan Labh

ஜீவன் லாப் (Jeevan Labh) - LIC –ன் இந்த திட்டத்தில், பாலிசி முதிர்ச்சியில் பெரும் தொகை கிடைக்கும். பாலிசி முடிவதற்குள் வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும். பாலிசிதாரர் LIC –ன் லாபத்திலும் ல் பங்கேற்கிறார். பாலிசியில் பரிந்துரைக்கப்பட்டவர் இறுதி கூடுதல் போனஸைப் பெறுவார். பிரீமியம் செலுத்தும் முறையின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு 2% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த பிரீமியங்கள் வருமான வரியின் 80 சி பிரிவின் கீழ் வராது.

3. Jeevan Umang

ஜீவன் உமங் (Jeevan Umang) - இது LIC –ன் மிக சக்திவாய்ந்த பாலிசியாகும். இந்த பாலிசி 100 வயது வரை பாதுகாப்பு அளிக்கிறது. பாலிசியின் காலம் முடிந்தாலோ, அல்லது காப்பீட்டாளரின் மரணம் ஏற்பட்டாலோ, குடும்பத்திற்கு பாலிசியின் மொத்த தொகை கிடைக்கும். இந்த பாலிசியில் 8% அளவிலான மணி பேக் திட்டமும் உள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு, இந்த திட்டம் ஒரு ஓய்வூதிய திட்டம் என்ற விதத்தில் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த திட்டமாக இருக்கும்.  

4. New Jeevan Anand

நியூ ஜீவன் ஆனந்த் (New Jeevan Anand) - LIC -ன் இந்தக் பாலிசியில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் முதலீடு செய்யலாம். பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ .1 லட்சம் உறுதி செய்ய (Sum Assured) வேண்டியது அவசியம். நியூ ஜீவன் ஆனந்த் பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினிக்கும் உத்தரவாதம் மிக்க மற்றும் ஒருங்கிணைந்த போனஸ் கிடைக்கும். பாலிசிதாரர் பாலிசியின் முழு காலத்திற்கும் உயிரோடிருந்தால், அவருக்கு டெபாசிட் போனஸுடன் உத்தரவாதமான அசல் தொகையும் வழங்கப்படும்.

5. Tech Term plan

டெக் டர்ம் பிளான் (Tech Term plan) ஒரு pure risk premium plan ஆகும். LIC -ன் இந்த ஆன்லைன் டர்ம் பாலிசி, ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானது. பாலிசி முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னர் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், பாலிசியின் தொகை குடும்பம்பத்திற்குக் கிடைக்கிறது.  பாலிசியின் கொள்கை காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையாகும். 18 வயது முதல் 65 வயது வரையிலான நபர்கள் இந்த திட்டத்தை எடுக்கலாம். LIC -ன் டர்ம் பிளானில், பாலிசி கவரேஜிற்கான அதிகபட்ச வயது வரம்பு 80 ஆக வைக்கப்பட்டுள்ளது. நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அமெக்ஸ் கார்டு, UPI, IMPS மற்றும் இ-வாலட் மூலம் புதுப்பித்தல் (renewal) மற்றும் பிரீமியம் செலுத்தலாம்.

ALSO READ:வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பணம் எடுக்கலாம்: அதுதான் Overdraft வசதி!!

Trending News