தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறார் இத்தாலியைச் சேர்ந்த ஓர் இளைஞர். உலகமே வேலை இழப்பைச் சந்திக்கத் தொடங்கிய கொடூர கொரோனா லாக் டவுன் காலம் அது. கொரோனாவின் தொடக்க காலத்தில் சீனாவுக்கு இணையாக பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு இத்தாலி.
அங்கேதான் அந்த இளைஞர் வேலை செய்துவந்தார். விளைவு- கொரோனா லாக் டவுன் அந்த இளைஞரையும் விட்டுவைக்கவில்லை; தான் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது அந்த இளைஞருக்கு. வேலையை இழந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என அறியாது தனது வீட்டுக்குத் திரும்புகிறார் அந்த இளைஞர். இந்தச் சம்பவம் நடந்தது சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு.
ஆனால் அந்த இளைஞரின் இன்றைய நிலையோ அப்படியே தலைகீழ். இன்று கோடிகளில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இணைய உலகில் அவரைத் தெரியாதோர் கிட்டத்தட்ட யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். ஆம் அவர்தான் டிக் டாக் பிரபலம் கேபி லேம். பார்த்துக்கொண்டிருந்த வேலை போன பின்னர் டிக்டாக் பக்கம் வந்த கேபி லேம், டான்ஸ் உள்ளிட்ட வழக்கமான வீடியோக்களை டிக்டாக்கில் போஸ்ட் செய்துவந்துள்ளார். அவை பெரிதாக ரீச் ஆகவில்லை.
இதையடுத்து அவருக்கு உதித்ததுதான் லைஃப்ஹேக்கிங்கை ட்ரால் செய்யும் ஐடியா. ‘மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மிசின்’ போல எளிய டிப்ஸ் எனும் பெயரில் உலாவரும் உபயோகமற்ற வீடியோக்களை ட்ரால் செய்யத் தொடங்கினார் கேபி லேம். இவ்வகை வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்கள் பட்டாளத்தை அள்ளினார்.
மேலும் படிக்க | 'விக்ரம்' ஓவர்; கட்சிப் பக்கம் திரும்பினார் கமல்! - அடுத்த மாஸ்டர் பிளான் ஸ்டார்ட்!
அதன் விளைவாகத் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் அவர். அதாவது, டிக்டாக்கில் உலகிலேயே அதிக பாலோயர்களைக் கொண்ட நபர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார். 2020 மார்ச் முதல் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த Charli D’Amelio எனும் பெண்ணை அவர் தற்போது முந்தி இருக்கிறார். டிக்டாக்கில் கேபி லேமின் பாலோயர் எண்ணிக்கை தற்போது 142.8 மில்லியனைத் தொட்டுள்ளது.
கேபி லேமிடம் உள்ள முக்கியமான சிறப்பம்சம் அவரது வீடியோக்களில் பொதுவாக மொழிப் பிரச்னை எதுவும் இருக்காது. மொழியற்ற ரியாக்ஷன் வீடியோக்களாக அவை அமைந்ததால் உலகளாவிய கவனத்தை அவரால் எளிதில் பெற முடிந்தது.
மேலும் படிக்க | மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு? - பாதியிலேயே வெளியேறிய முதலமைச்சர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR