Kerala gold smuggling case: தான்சானியாவில் இருந்து கேரளா வரை நீளும் தங்கக் கடத்தல் பாதை…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு பல புதிய திருப்பங்களையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. தான்சானியாவில் இருந்து இதற்கான ஆணிவேர் தொடங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆயுதக்கடத்தல் என்ற கிளையும் விரிகிறது. இன்னும் என்னென்ன குட்டிக் கிளைகள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் வெளியாகுமோ என்ற அச்சமும் எழுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 15, 2020, 04:54 PM IST
  • தான்சானியாவில் தாவூத் இப்ராஹிம் வைர வியாபாரம் செய்வது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அதிகளாவில் வெளியாகியுள்ளன...
  • 2019ஆம் ஆண்டு நவம்பரில் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் ரமீஸ் கைது செய்யப்பட்டார்...
  • செல்லுபடியாகக்கூடிய உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததாக ரமீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது...
Kerala gold smuggling case: தான்சானியாவில் இருந்து கேரளா வரை நீளும் தங்கக் கடத்தல் பாதை… title=

புதுடெல்லி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு பல புதிய திருப்பங்களையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. தான்சானியாவில் இருந்து இதற்கான ஆணிவேர் தொடங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆயுதக்கடத்தல் என்ற கிளையும் விரிகிறது. இன்னும் என்னென்ன குட்டிக் கிளைகள் தங்கக் கடத்தல் விவகாரத்தில் வெளியாகுமோ என்ற அச்சமும் எழுகிறது.

இதனிடையில், இந்தியாவால் தேடப்படும் டான் தாவூத் இப்ராஹிமுக்கும் கேரள தங்க கடத்தல் வழக்கிற்கும் இடையேயான தொடர்புகள் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் வெளிவந்துள்ளது.  
 
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ரமீஸ் (Ramees) என அடையாளம் காணப்பட்ட ஒரு நபரின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணையின் போது, பல வழக்குகள் தொடர்பாக இந்தியாவில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பற்றி என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஆப்பிரிக்காவில் ரமீஸுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று என்.ஐ.ஏ கூறுகிறது.

விசாரணையின் போது தெரிய வந்த தகவல்களின் படி, ரமீஸ் தான்சானியாவில் வைர வியாபரத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதை ஒப்புக்கொண்டார். இதை நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது. தான்சானியாவில் தங்க சுரங்க உரிமம் பெற முயன்ற ரமீஸ், அங்கிருந்து தங்கத்தை கொண்டு வந்ததாகவும் என்ஐஏ கூறியது. தான்சானியாவிலிருந்து (Tanzania) வாங்கிய தங்கத்தை ரமீஸ் விற்பனை செய்தார்.

"தான்சானியாவில் தாவூத் இப்ராஹிம் வைர வியாபாரம் செய்வது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அதிகளாவில் வெளியாகியுள்ளன. தாவூதின் கூட்டாளியான ஃபெரோஸ் (Feroz) வைர வியாபாரத்தை நிர்வகிக்கிறார். இந்த ஃபெரோஸ் தென்னிந்தியர் என்று பாதுகாப்பு ஏஜென்சிகள் கருதுகின்றன" என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மொபைல் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, அவர் ரமீஸுடன் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது என்று மத்திய புலான்ய்வு முகமை தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு நவம்பரில் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கவரால் ரமீஸ் கைது செய்யப்பட்டார். செல்லுபடியாகக்கூடிய உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டது.
கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தற்போது, தீவிரவாதம், ஆயுதக் கடத்தல் என நீண்டுக் கொண்டே செல்கிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிவிட்டது போல் தோன்றுகிறது.

Read Also | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News