புதுடெல்லி: 2019 ஐபிபிஎஸ் பிஓ/எம்டி முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. உதவி மேலாளர் (பிஓ-Probationary Officers) / மேலாண்மை பயிற்சியாளர்கள் (எம்டி-Management Trainees) பதவிக்கான முதற்கட்ட தேர்வின் முடிவை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) வெள்ளிக்கிழமை அறிவித்தது. தேர்வு எழுதியவர்கள் தங்கள் முடிவை ஐபிபிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in இல் சரிபார்க்கலாம்.
கடந்த அக்டோபர் 12, 13, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஐபிபிஎஸ் முதல்நிலை தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தியது. இந்த தேர்வு மூலம் 4,336 பணியிடங்கள் நிரப்பப்படும்.
IBPS PO / MT முதல்நிலை தேர்வின் முடிவை எவ்வாறு சரிபார்ப்பது..!!
Step 1: அதிகாரப்பூர்வ ஐபிபிஎஸ் வலைத்தளமான ibps.in ஓபன் செய்யவும்.
Step 2: இந்த முகப்புப்பக்கத்தில், ஆன்லைன் முதல்நிலை தேர்வின் உங்கள் முடிவைக்காண CRP PO / MTs-IX இணைப்பைக் கிளிக் செய்க.
Step 3: அடுத்த பக்கத்தில், உங்கள் பதிவு / ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
Step 4: உங்கள் தேர்வு முடிவு அடுத்த பக்கத்தில் திறக்கப்படும்.
Step 5: தேர்வு முடிவு நகலை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
நவம்பர் 8 ஆம் தேதி வரை தேர்வு எழுதியவர்கள் தங்கள் முடிவைக் காணலாம். அதன் பிறகு வலைதளத்தின் இணைப்பு முடக்கப்படும்.
தரவில் வெற்றி பெற்றவர்கள், அடுத்து நவம்பர் 30 ஆம் தேதி நடத்தப்படும் பிரதான தேர்வுக்கு ஆஜராக வேண்டும். பிரதான தேர்வுக்கான நுழைவு அட்டைகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.