Pongal 2023: டயட் இருப்பவர்கள் இப்படி பொங்கல் செஞ்சி சாப்பிடுங்க..

Diet Pongal Recipe: டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு ஓட்ஸ் அல்லது திணை பொங்கல் செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 15, 2023, 05:08 PM IST
  • பொங்கலை தாளிக்க நெய்க்கு பதில் செக்கு தேங்காய் பயன்படுத்தலாம்.
  • திணை பொங்கல் செய்வது எப்படி.
  • குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
Pongal 2023: டயட் இருப்பவர்கள் இப்படி பொங்கல் செஞ்சி சாப்பிடுங்க.. title=

Happy Pongal 2023: தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று பெரும்பாலான வீடுகளில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் என்பது தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. நல்ல சுவையாக இருக்க வேண்டும் என்று நாம் இதில் அதிகளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து செய்வோம். ஆனால் டயட் இருப்பவர்களுக்கு ஏதேனும் இதுபோன்ற பண்டிகை காலம் வந்தாலே கலோரி குறைவாக சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப் படுவார்கள். அந்தவகையில் டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு திணை பொங்கல் செய்து சாப்பிடலாம். ஏனெனில் ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. எனவே இந்த உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

திணை பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

திணை- 2 கப், பாசிப்பருப்பு - 1 கப், இஞ்சி - 1 துண்டு, செக்கு தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு, மிளகு - சிறிதளவு, சீரகம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, முந்திரி பருப்பு - சிறிதளவு

மேலும் படிக்க | கலை நிகழ்ச்சிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் பொங்கல் கொண்டாட்டம்!

திணை பொங்கல் செய்முறை:

முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து வரகரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும். ஒரு வாணலியில் பாசிப்பருப்பை ஆகியவற்றை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியை தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். அதன்பின் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

பிறகு குக்கரில் திணை, பாசிப்பருப்பை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு மூடி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

அதன்பின் வாணலில் சிறிதளவு செக்கு தேங்காய் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். பிறகு அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு வருத்துக்கொள்ளவும். அதன் பின் பொங்கலின் மேல் இந்த தாளிப்பு கலவையை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். இதோ சுவையான திணை பொங்கல் ரெடி.

மேலும் படிக்க | Jallikattu 2023: அவனியாபுரத்தில் தகுதி நீக்கம் செய்யப்படும் காளைகள்... அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News