Gold: தங்கத்தின் மங்கிய விலை 2022ஆம் ஆண்டில் மின்னும்! கிராமுக்கு 5500 ரூபாயாக அதிகரிக்கும்!

பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீண்டும் கிடுகிடுவென அதிகரிக்கும்! இது தங்கம் வாங்க நல்ல நேரம்! புத்தாண்டிற்கான சிறந்த முதலீடு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 11:37 AM IST
  • தங்கத்தின் விலை 2022ஆம் ஆண்டில் அதிகரிக்கும்
  • என்றும் மங்காது தங்கத்தின் விலை! மீண்டெழும் தங்கம்
  • பங்குச் சந்தைகள் வீழும்
Gold: தங்கத்தின் மங்கிய விலை 2022ஆம் ஆண்டில் மின்னும்! கிராமுக்கு 5500 ரூபாயாக அதிகரிக்கும்!  title=

தங்கத்தின் பொலிவு மீண்டும் திரும்பும் என்றும், தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான முதலீடாக மாறும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். 

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீண்டும் 10 கிராமுக்கு ரூ.55,000 என்ற அளவை எட்டக்கூடும். பிடிஐ செய்தியின்படி, கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கத்தின் பொலிவு சற்று மங்கினாலும், மங்கிய தனது பொலிவை புத்தாண்டில் திரும்பப் பெறும்.

தங்க வேட்டை
2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 தொற்றுநோயின் முதல் அலையின் போது, ​​தங்கத்தின் விலை (Gold Price) துரிதகதியில் அதிகரித்தது. 10 கிராம் ரூ.56,200 என்ற விலையை எட்டிய நிலையில், 2021 ஆம் ஆண்டு தங்கத்திற்கு மங்கும் ஆண்டாகவே இருந்தது. பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்ட நிலையில், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பு குறைந்துள்ளது. 

இதனால், தற்போது தங்கம் கிராமுக்கு 4800 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இருந்த விலையுடன் ஒப்பிடும்போது விலை 14 சதவீதம் குறைவாக உள்ளது மற்றும் ஜனவரி 2021 உடன் ஒப்பிடும்போது நான்கு சதவீதம் குறைந்துள்ளது. 
இந்த வீழ்ச்சிக்குப் பிறகும், தங்கத்தின் தற்போதைய இந்திய விலை, மொத்த சர்வதேச விலையை விட மூன்று சதவீதம் அதிகமாக உள்ளது, இதற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததே காரணம்.

Also Read | தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி; தங்கம் வாங்க ஏற்ற நேரம்..!!

தங்க விலை
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் கோவிட் தொற்று அதிகரிக்கும் சாத்தியக்கூறு காரணமாக ஐரோப்பாவின் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தங்கத்தின் விலையை அதிகரிக்கும் என்று முந்தைய அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

தற்போது, சர்வதேச சந்தையில், ஸ்பாட் சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $ 1,791 என்ற அளவில் இருந்தது, அதே நேரத்தில் இந்தியாவில் MCX தங்கத்தின் விலை டிசம்பர் 29 அன்று 10 கிராமுக்கு ரூ.47,740 ஆக இருந்தது. பணவீக்கம் தவிர, கொரோனா வைரஸின் புதிய வடிவமான ஓமிக்ரானில் இருந்து எழும் நிச்சயமற்ற தன்மைகளும் இந்த ஏற்றத்திற்கு உத்வேகத்தை அளிக்கும்.

பங்குச் சந்தைகளின் (Share Market) சரிவுப் போக்கு மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தங்கத்தை ஒரு கருவியாகக் கருதும் சிந்தனையால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக்கும் அதிலும் ஏதேனும் புவி-அரசியல் பதற்றம் ஏற்பட்டால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும்.  

ALSO READ:Paytm IPO: முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் மக்கள், வல்லுனர்களின் கணிப்பு என்ன? 

2022இல் விலை
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், தங்கம் ஒரு அவுன்ஸ் $ 1700-1900 வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இரண்டாவது பாதியில் அது ஒரு அவுன்ஸ் $ 2,000 அளவைக் கூட தாண்டும் என்று நிபுணர்கள் கருதுகீன்றனர். ஆண்டின் முதல் பாதியில் 10 கிராமுக்கு ரூ.45,000-50,000 என்ற வரம்பில் இருக்கும் என்றும், இரண்டாவது பாதியில் 10 கிராமுக்கு ரூ.55,000-ஐத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி செக்யூரிட்டிஸ் மூத்த ஆய்வாளர் (கமாடிட்டிஸ்) தபன் படேல், அமெரிக்க பணவீக்க தரவு மற்றும் பத்திரங்களின் நிலைமை ஆகியவை தங்கத்திற்கு ஊக்கமளிக்கும் என்று கூறினார். நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1970 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது அவரது கூற்றாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இது, 10 கிராமுக்கு ரூ.51,800 ஆக இருக்கலாம். உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி (இந்தியா) சோமசுந்தரம் பிஆர், ஹால்மார்க்கிங்கை கட்டாயமாக்குவதன் மூலம் வணிகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது என்று நம்புகிறார். ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை விற்க இதுவரை 1.27 லட்சம் நகைக்கடைக்காரர்கள் BISல் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:Gold Hunt: தங்கப் புதையலை கண்டுபிடித்த இந்தோனேசிய மீனவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News