Benefits of Oil Massage For New Born: இந்தியாவில், பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு செயல்முறை. தாய் மற்றும் குழந்தை இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் அதே நேரத்தில், குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் அவர்களின் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. மேலும், மசாஜ் செய்வதால் எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதோடு மசாஜ் செய்த பிறகு குழந்தை நன்றாக தூங்கும் என்பதால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
சரியான முறையில் மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம். மசாஜ் செய்வது எப்படி என்பது சம்பந்தமான சில உபயோகமான குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான சிறந்த எண்ணெய்
குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வது, சாதாரண மசாஜ் செய்வதை காட்டிலும் எண்ணற்ற பலன்களை அளிக்கிறது. எனினும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் பொழுது ஆலிவ் எண்ணெய் (Olive Oil) அடர்த்தி அதிகம் உள்ள எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். லேசான, ஒட்டாத மற்றும் வைட்டமின் E நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் படிக்க | Sun Tan: வெயிலால் கருத்த முகத்தை ... பளபளப்பாக்க சில டிப்ஸ்..!!
மசாஜ் கொடுக்கும் சரியான முறை
குழந்தைக்கு மசாஜ் கொடுக்கும் பொழுது அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. மாறாக மென்மையான மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யத் தொடங்கிய முதல் சில வாரங்களில் மிக மென்மையான அழுத்தங்களை கொடுத்து தொடங்க வேண்டும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டாம். குழந்தைநல நிபுணரின் ஆலோசனை பெற்ற பிறகு, உங்கள் குழந்தையின் உடல் நிலைக்கு எற்றவாறு மசாஜ் செய்வது சிறப்பு.
சரும பராமரிப்பு
குழந்தைக்கும் மசாஜ் செய்வது சரும பராமரிப்புக்கு மிக அவசியம். குழந்தையின் மென்மையான சருமத்திற்கு ஊட்டமளிக்க மசாஜ் உதவுகிறது. மசாஜ் குழந்தையின் சருமத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
குழந்தையை மசாஜ் செய்வதற்கான சரியான நேரம்
மசாஜ் செயல் முறையை துவங்குவதற்கு முன்பு உங்கள் குழந்தை ரிலாக்ஸாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். எண்ணெய் மசாஜ்கள் குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டும். குழந்தை அமைதியாக இருக்கும் சமயத்திலும், பால் உண்ட 2 மணி நேரத்திற்கு பிறகு மசாஜ் கொடுப்பது அவசியம்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் பொழுது குழந்தையின் கால்களில் இருந்து துவங்குவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். கீழ் நோக்கி மசாஜ் செய்வதால் குழந்தைகள் ரிலாக்ஸாக உணரும். மசாஜ் செய்யும் பொழுது குழந்தையின் கண்களை பார்த்து, அதனுடன் பேசிக் கொண்டிருப்பது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதை மட்டும் செய்யுங்கள்! உங்கள் குழந்தை உங்களது சொல்பேச்சை கேட்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ