வங்கி விடுமுறை பட்டியல்: ஹோலி வங்கி விடுமுறை: மார்ச் மாதம் பண்டிகை மாதமாக நிறைந்துள்ளது. எனவே நீங்கள் வங்கிக்குச் செல்ல திட்டமிட்டால், அதற்கு முன் விடுமுறைகளின் பட்டியலை (மார்ச் வங்கி விடுமுறைகள் 2022) சரிபார்க்கவும். அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்ககள் மூடப்பட்டு இருக்கும். எந்த நாளில் எந்த நகர வங்கிகள் மூடப்படும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரிசர்வ் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது
வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆண்டின் தொடக்கத்தில் வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மாநிலத்திற்கு ஏற்ப விடுமுறை அடங்கும்.
மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ
மொத்த விடுமுறைகள் 13 நாட்கள்
மார்ச் மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 13 நாட்கள் வங்கி விடுமுறைகள் இருந்தன. இது தவிர, மாநில வாரியாக விடுமுறை பட்டியல் உள்ளது.
எந்த நாளில் வங்கிகள் இயங்காது என்று பார்ப்போம்
மார்ச் 17, 2022, வியாழக்கிழமை – ஹோலிகா தகனைக் கொண்டாட டெஹ்ராடூன், கான்பூர், லக்னோ, ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 18, 2022, வெள்ளிக்கிழமை – ஹோலி காரணமாக அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 19, 2022, சனிக்கிழமைக்கிழமை – ஹோலி/யோசாங் காரணமாக புவனேஸ்வர், இம்பால், பாட்னாவில் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 20, 2022, ஞாயிற்றுக்கிழமை – வங்கி விடுமுறை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR