தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த
ஸ்ரீதேவியின் மரணம் எனக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனது உண்மையான நண்பரையும், திரையுலகம் நல்ல நடிகையையும இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கமல்ஹாசன்
ஸ்ரீதேவி தான் அடைந்த புகழுக்கு முற்றிலும் தகுதியானவர் என்று தெரிவித்தார். மேலும் மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்.
இயக்குநர் பாரதிராஜா:
ஸ்ரீதேவி இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரின் சிரிப்பு நம் கண்ணைவிட்டு மறையவில்லை. தெற்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகைகளில் மிகச்சிறப்பான வெற்றி பெற்றவர் ஸ்ரீதேவி.
ஏ.ஆர்.ரகுமான்:
ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்
நடிகை ராதா:
நடிகை ஸ்ரீதேவியின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை.
கிரிக்கெட் வீரர் சச்சின்:
நடிகை ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒய்.ஜி.மகேந்திரன்:
ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
நடிகை குஷ்பூ:
ஸ்ரீதேவியின் குழந்தை சிரிப்பை தவறவிட்டுவிட்டோம். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
நடிகை ரோஜா:
நடிகைகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. புகழ்பெற்ற ஸ்ரீதேவி இனி இல்லை என்பதை யாராலும் ஜீரனிக்க முடியாத ஒன்று.
நடிகை ரேகா:
ஸ்ரீதேவியின் மறைவு கனவாக இருக்ககூடாதா என நினைக்கத் தோன்றுகிறது.முதல்வர் பழனிசாமி: ஸ்ரீதேவியின் மறைவு தமிழ் மட்டுமல்லாது இந்திய திரையுலகத்திறகே பேரிழப்பு.
நடிகர் சிவக்குமார்:
16 வயதினிலே மயிலு கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.