72 ஆண்டு பிரிவிற்கு பின்னர், மனைவியை சந்தித்தார் நாராயணன்!

கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்வர் நாராயணன் நம்பியார் (வயது 90). தான் 20-வயதில் இருந்தபோது பெற்றோர் சம்மதத்துடன் தனது மாமன் மகள் சாராதாவை (தற்போது வயது 86) திருமணம் செய்துக்கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2018, 02:54 PM IST
72 ஆண்டு பிரிவிற்கு பின்னர், மனைவியை சந்தித்தார் நாராயணன்! title=

கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்வர் நாராயணன் நம்பியார் (வயது 90). தான் 20-வயதில் இருந்தபோது பெற்றோர் சம்மதத்துடன் தனது மாமன் மகள் சாராதாவை (தற்போது வயது 86) திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் தங்களது முதல் ஆண்டு திருமணக் கொண்டாடத்தினை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, கசப்பான நிகழ்வு ஒன்றின் காரணாமக பிறிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது 72 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்தித்துள்ளனர்.

1946-ஆம் ஆண்டு திருமணம் முடித்த இத்தம்பதியர் அமைதியான வாழ்க்கையினை நடத்தி வந்த நிலையில், அதே ஆண்டில் அப்பகுதியில் நிகழ்ந்த விவசாயிகள் போராட்டம் காரணமாக சிதைந்துள்ளது. கவும்பாயி விவசாயிகள் போராட்டம் எனப்படும் இந்த நிகழ்வில் அப்போது நாயராயணம் நம்பியார் மற்றும் அவரது தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவரது தந்தை சிறையிலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய நாராயாணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக ஆதரவற்று தனித்து விடப்பட்ட சாராத தனது சொந்த வீட்டிற்கு திரும்பினார். காலங்கள் உருண்டோட சாரதாவிற்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாராயணன் குடும்பத்தாருடன் சாரதாவிற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாராயணனும் மறுமணம் செய்துக்கொண்டு 7 குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார். 

இந்நிலையில் தற்போது இந்த விவரங்களை அறித்த சாராதாவின் மகன் KK பார்கவன், தனது தாயின் முதல் கணவரை அவருக்கு காண்பிக்க வேண்டும் என முயற்சித்து நாராயண நம்பியார் குடும்பத்தை தேடும் முயற்சியில் இறங்கினார். நீண்ட நாள் முயற்சிக்கு பின்னர் நாராயணனை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தார் உதவியுடன் சாரதாவையும், நாராயணனையும் சந்திக்க வைத்துள்ளார். 

சமீபத்தில் இந்த சந்திப்பு நிகழ்வு சாரதாவின் வீட்டில் பாராம்பரிய விருந்துடன் நடைப்பெற்றுள்ளது.

Trending News