இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Chargeman, Draughtsman, MT Fitter (Mech) மற்றும் MTS (Peon) பணியிடங்களை நிரப்ப, தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கென்று மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:
Chargeman – 02 பணியிடங்கள்
Draughtsman – 01 பணியிடம்
MTFitter (Mech) – 01 பணியிடம்
MTS (Peon) – 02 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:
Chargeman – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Mechanical or Electrical or Marine or Electronics Engineering or Production Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Draughtsman – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Diploma in Civil or Electrical or Mechanical or Marine Engineering or Naval Architecture and Ship construction முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
MTFitter (Mech) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MTS (Peon) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளராக இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு:
02 நவம்பர் 2022 தேதியின்படி, 18 முதல் 27 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/2022091606340054437... என்ற தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நவம்பர் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ