லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள யோகி ஆதித்யநாத்தின் பிரமாண்டமான பதவியேற்பு விழாவை மார்ச் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லக்னோவில் உள்ள ஏகானா அரங்கத்தில் ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும், விழாவிற்கான விருந்தினர் பட்டியலில் பல ஆயிரம் பேர் உள்ளதாகவும் ஐஏஎன்எஸ் இடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அறிக்கையின்படி, நிகழ்விற்கான விருந்தினர்களின் பட்டியலை பிஜேபி தயாரித்து வருகிறது. மேலும் விருந்தினர்களில், பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளும் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இவர்கள் "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்" என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ள அரங்கத்தில், சுமார் 200 வி.வி.ஐ.பி.க்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பலர், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சில முக்கியப் பிரமுகர்கள் உட்பட பல வி.வி.ஐ.பி.க்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அதிகாரிகள் ஐஏஎன்எஸ்ஸிடம், விழா 'நிகரற்ற ஒரு விழாவாக' இருக்கும் என்று கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 255 இடங்களைக் கைப்பற்றி பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாநிலங்களவை எம்.பி ஆகும் ஹர்பஜன் சிங்! ஆம் ஆத்மி கட்சியுடன் இணைகிறாரா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR