Osteoporosis: சில கெட்ட பழக்கங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, அதனை சல்லடையாக்கி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, இளமையை குலைத்து முதுமையை கொடுக்கும்.
கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகள் மட்டுமல்ல பற்களும் பலவீனமடையும். அதோடு கால்ஷியம் பல செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. அதன் குறைபாடு உடலில் பல வகைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நமது எலும்புகள் உடலுக்கு வடிவத்தை கொடுக்கும் ஆதாரங்கள். எலும்புகள் வலுவிழந்தால் அது முழு உடலையும் பாதிக்கும் என்பதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டு வலி என்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் . ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளின் அடர்த்தி குறைந்து எளிதில் உடையும் தன்மையை கொடுக்கும் ஒரு நோயாகும்.
நம் வாழ்க்கை முறையின் சில தவறான பழக்கங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தை அதிகரிக்கின்றன. கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு போன்ற காரணிகள் எலும்புகளை பலவீனப்படுத்துகின்றன. இந்த நோய் பெண்களில் காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சனை. ஆனால் ஆண்களும் விதிவிலக்கல்ல.
காபி மற்றும் டீ பழக்கம்: அதிகப்படியான காஃபின் உட்கொள்வது காஃபின் கொண்ட உணவுகளை (எ.கா. டீ, காபி) அதிகமாக உட்கொள்வது உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனை பாதிக்கிறது. இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன. எனவே, அளவிற்கு அதிகமாக காஃபின் கொண்ட பானங்களை குடிப்பதைத் தவிர்க்கவும். தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
அளவிற்கு அதிக உப்பு: அளவிற்கு அதிக உப்பை உட்கொள்வதால் உடலில் கால்சியத்தின் அளவு குறையும். இது எலும்புகள் பலவீனமடையும் அபாயத்தை அதிகரிக்கிறது. உப்பை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கலாம்.
முறையற்ற மருந்துப் பயன்பாடு சில ஸ்டெராய்டுகள் அல்லது மருந்துகளின் நீண்ட காலப் பயன்பாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம். எனவே,மருத்துவர் ஆலோசனையின்றி, நீண்ட காலத்திற்கு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
புகையிலை மற்றும் ஆல்கஹால் பழக்கங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கின்றன. எலும்புகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை இது குறைக்கிறது. எலும்பு அடர்த்தியை விரைவாகக் குறைக்க வழிவகுக்கிறது. கூடுதலாக, ஆல்கஹாலில் உள்ள ரசாயனங்கள் எலும்புகளை சேதப்படுத்தி, உடலில் கால்சியம் அளவைக் குறைக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது முக்கியம். செயலற்ற வாழ்க்கை முறை அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, எலும்புகளை வலுப்படுத்த வழக்கமான நடைபயிற்சி, யோகா அல்லது பிற பயிற்சிகள் அவசியம்.
ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது முக்கியம். செயலற்ற வாழ்க்கை முறை அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், இந்த நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, எலும்புகளை வலுப்படுத்த வழக்கமான நடைபயிற்சி, யோகா அல்லது பிற பயிற்சிகள் அவசியம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.