சி.ஆர்.பி.எஃப் காவலர்கள் சென்ற வாகனங்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. "வெளிப்படையான பாரபட்சம்" மற்றும் "தவறான கதை" உருவாக்கும் முயற்சி என்று இந்திய வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.
“ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது மற்றும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற அறிக்கைக்கான நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
“ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப்பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது,” என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
#WATCH: Stones were pelted on the convoy of CRPF after one of the CRPF buses allegedly hit a motorcycle in Banihal area of Jammu & Kashmir. pic.twitter.com/grP9XUD5BQ
— ANI (@ANI) June 14, 2018
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பனிஹால் பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், பனிஹால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.