தலைதூக்கும் கொரோனா, 5 மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் உயர் எச்சரிக்கை

Health Ministry's warning to 5 states: டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகபட்ச கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு ஆகி வருகின்றது. இதில் கேரளா மற்றும் டெல்லியில் நிலைமை கடும் ஆபத்தானதாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 9, 2022, 06:42 AM IST
  • 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
  • மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்
  • நிலைமை மோசமடைவதாக எச்சரித்தது
தலைதூக்கும் கொரோனா, 5 மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் உயர் எச்சரிக்கை title=

கடந்த இரண்டு வருடங்களாக உலகமே கொரோனா பீதியில் தத்தளித்து வருகின்றது. பல நாடுகள் தற்போது இந்த பாதிப்பிலிருந்து சற்று நிவாரணம் பெற்று மெல்ல மெல்ல சாதாரண வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முயல்கின்றன. இந்த நாடுகளில் நமது நாடும் அடங்கும். ஆனால் தற்போது மீண்டும் நாட்டின் 5 மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று எண்ணிக்கைகள் வெளிவருகின்றன. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை செயலர், டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது
இந்த கடிதத்தில், டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் பாசிடிவிட்டி விகிதம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த வாரம் 2321 புதிய எண்ணிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது முழு நாட்டின் கொரோனா எண்ணிக்கைகளின் 31.8 சதவீதமாகும், மேலும் பாசிடிவ் விகிதம் 13.45 சதவீதத்திலிருந்து 15.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. மிசோரமில் 814 புதிய எண்ணிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன, இது நாட்டின் மொத்த எண்ணிக்கைகளின் 11.16 சதவீதமாகும். இங்கும் பாசிடிவ் விகிதம் 14.38 சதவீதத்தில் இருந்து 16.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | Covid 4th Wave: இந்தியாவின் கொரோனாவின் நான்காவது அலை! WHO விடுக்கும் எச்சரிக்கை

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் 794 புதிய கொரோனா வைரஸ் எண்ணிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன, இது நாட்டின் மொத்த எண்ணிக்கைகளின் 10.9 சதவீதமாகும். இங்கு பாசிடிவ் விகிதம் 0.39 சதவீதத்தில் இருந்து 0.43 சதவீதமாக அதிகரித்துள்ளது. டெல்லியில் 826 புதிய எண்ணிக்கைகள் வந்துள்ளன, இது நாட்டின் எண்ணிக்கைகளின் 11.33 சதவீதமாகும். டெல்லியிலும் பாசிடிவ் விகிதம் 0.51 சதவீதத்தில் இருந்து 1.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ஹரியானாவில் 416 புதிய எண்ணிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது நாட்டின் எண்ணிக்கைகளின் 5.70 சதவீதம் ஆகும். இங்கும் பாசிடிவ் விகிதம் 0.51 சதவீதத்தில் இருந்து 1.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து கவனமாக இருக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் நோயின் பாசிடிவ் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தற்போது, ​​இந்தியாவில் மொத்தம் 11,492 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தின் கவலையை உயர்த்தியுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களும் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மண்டலத்தை அதிகரிக்க தயங்க வேண்டாம் என்றும் மத்திய சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார். இந்த மாநிலங்களின் அலட்சியம் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Fourth wave of Covid: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் புதிய அறிகுறிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News