பட்ஜெட் அமர்வில் பாராளுமன்றம் பொருளாதார பிரச்சினைகள் குறித்து பெருமளவில் விவாதிக்க விரும்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடிதெரிவித்துள்ளார்!!
டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அனைத்துப் பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார மந்த நிலை, ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் சிறைவைப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பல எம்பிக்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பொருளாதாரத்தை இந்தியாவுக்கு சாதகமான நிலையில் மாற்றலாம் என்ற விவாதத்தை வரவேற்பதாக தெரிவித்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் மத்திய பட்ஜெட் அமர்வு இன்று காலை பாராளுமன்றத்தில் துவங்கியது. இந்நிலையில், கூட்டத்திற்க்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மோடி... நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறந்த கூட்டத்தொடராக அமைய வலிமையாக அடித்தளம் அமைப்பதாக இருக்கும். இந்த கூட்டத்தொடர் குறிப்பாக பொருளாதாரம், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதாக இருக்கும். இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
Prime Minister @narendramodi addresses media ahead of #BudgetSession of the Parliament #Budget2020 pic.twitter.com/5R0tGE1lPu
— PIB India (@PIB_India) January 31, 2020
2020 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், இதில் எடுக்கப்படும் முயற்சிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பதாக இருக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார். மேலும், கடந்த இரண்டு அமர்வுகளில், அதிகரித்த உற்பத்தித்திறனையும், அதற்கு ஆதரவாக பெரும் மக்கள் பதிலையும் நாடு கண்டது. திரு மோடி, மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில், சபையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் அனைத்து பிரச்சினைகளையும் திறந்த மனதுடன் விவாதிப்பது பொறுப்பு" என அவர் கூறினார்.