முழுக்கடனையும் கட்டிவிடுகிறேன் என சரண்டராகும் விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளிடம் கடண் வாங்கி திரும்பச் செலுத்தாமல் லண்டன் தப்பி சென்ற விஜய் மல்லையா, தற்போது முழு கடணையும் திரும்ப செலுத்த முன்வந்துள்ளார்!

Last Updated : Dec 5, 2018, 12:22 PM IST
முழுக்கடனையும் கட்டிவிடுகிறேன் என சரண்டராகும் விஜய் மல்லையா!  title=

இந்திய வங்கிகளிடம் கடண் வாங்கி திரும்பச் செலுத்தாமல் லண்டன் தப்பி சென்ற விஜய் மல்லையா, தற்போது முழு கடணையும் திரும்ப செலுத்த முன்வந்துள்ளார்!

இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார் விஜய் மல்லையா. வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இதன்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. 

இந்தியா தொடுத்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், விஜய் மல்லையா தான் முழுக்கடனையும் திரும்பச் செலுத்திவிடுவதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த விஷயத்தை நான் சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்கிறேன். ஆனால், இங்கு முக்கிய விஷயம் மக்கள் பணம். அந்தப் பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். ஆனால், நான் திரும்பச்செலுத்த முன்வருவது மறுக்கப்பட்டால்?" என பதிவிட்டுள்ளார்.

மல்லையா லண்டனிலிருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 10-ஆம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது மல்லையா தனது முழுகடணை திருப்பி அளிக்க முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News