சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசு திட்டம்: ராம் மாதவ்

தனது புதிய புத்தகமான 'Because India Comes First'' என்ற புத்தக வெளியீட்டில் பேசிய மாதவ், "அரசியல் சாராத" மற்றும் "அரசு சாரா" சக்திகளால் ஜனநாயகம்  புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2021, 04:55 PM IST
  • "அரசியல் சாராத" மற்றும் "அரசு சாரா" சக்திகளால் ஜனநாயகம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.
  • சமூக ஊடகங்கள் அரசாங்கங்களை கவிழ்க்கக் கூடிய அளவிற்கு சக்திவாய்ந்தவையாகிவிட்டன.
  • அராஜகத்திற்கு துணை நின்று, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடும்.
சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசு திட்டம்: ராம் மாதவ் title=

பாஜகவின் மூத்த தலைவர் ராம் மாதவ், சமூக ஊடகங்கள் அரசாங்கங்களை கவிழ்க்கக் கூடிய அளவிற்கு சக்திவாய்ந்தவையாகிவிட்டன, அராஜகத்திற்கு துணை நின்று, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடும், இதை சமாளிப்பதற்கான தீர்வுகள் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.தனது புதிய புத்தகமான 'Because India Comes First'' என்ற புத்தக வெளியீட்டில் பேசிய மாதவ், "அரசியல் சாராத" மற்றும் "அரசு சாரா" சக்திகளால் ஜனநாயகம்  புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.

"சமூக ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவை அரசாங்கங்களை கவிழ்க்கக் கூடியவை, அவை  வரம்பிற்குள் வராததால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். இந்த சக்திகள் அராஜகத்தை ஊக்குவித்து  ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடும், ஆனால் தீர்வுகள் அரசியலமைப்பிற்குள் இருக்க வேண்டும்," என்று கூறிய அவர், தற்போதுள்ள சட்டங்கள் இதற்கு போதுமானதாக இல்லை, என்றார்.

"இந்த சவால்களை சமாளிக்கவும் நிர்வகிக்கவும் எங்களுக்கு புதிய விதிகள் மற்றும் சட்டங்கள் தேவை. அரசாங்கம் ஏற்கனவே இது தொடர்பான பணியில் செயல்பட்டு வருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மைக்ரோ-பிளாக்கிங் தளத்தை இந்திய சட்டத்தை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டது தொடர்பாக அரசாங்கத்திற்கும் ட்விட்டருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் மாதவ்-ன் கருத்துக்கள் வந்துள்ளன.

இது தவிர, உச்சநீதிமன்றம் சமூக ஊடகங்கள் (Social Media) மீதான கட்டுபாடு தொடர்பான வழக்கை விசாரிக்கையில், மத்திய அரசு மற்றும் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, வெறுப்பு, வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவும், இதற்கான ஒரு சட்டத்தை உருவாக்கவும் கோரியுள்ளது.  இந்தியாவுக்கு எதிரான வேண்டுமென்றே வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகள் தொடர்பாக, ட்விட்டர் இந்தியாவில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ALSO READ | Twitter-க்கு மாற்றான Koo தளத்திற்கு இந்திய அமைச்சர்கள் மாறக் காரணம் என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News