அனில் அம்பானியின் ராஜினாமா-வை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் வழங்குநர்கள் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சமீபத்தில், அனில் அம்பானி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் வழங்குநர்கள் அனில் அம்பானி மற்றும் நிறுவனத்தின் நான்கு அதிகாரிகளின் ராஜினாமாவை நிராகரித்துள்ளனர். மேலும் கடன் மற்றும் நொடித்துச் செல்லும் பணியில் ஒத்துழைக்குமாறு கடன் வழங்குநர்கள் அம்பானியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
BSE தாக்கல் செய்ததில், RCOM அதன் கடன் வழங்குநர்கள் குழு (COC) கூட்டம் நவம்பர் 20 அன்று நடைபெற்றது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது., "ராஜினாமாக்களை ஏற்க முடியாது என்று குழு ஏகமனதாக கூறியது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவுகளின்படி, இந்நிறுவனம் 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான இழப்பைக் கொண்டிருந்தது, இது வோடபோன்-ஐடியாவுக்குப் பிறகு பெருநிறுவன வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய இழப்பாகும்.
இந்நிலையில் அனில் அம்பானி தவிர, சாயா விராணி, ரெய்னா கரணி, மஞ்சரி கக்கர், மற்றும் சுரேஷ் ரங்காச்சர் ஆகியோர் அந்தந்த பதவிகளை ராஜினாமா செய்ததாக நிறுவனம் ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இவர்களில், அனில் அம்பானி, சாயா விரணி, மஞ்சரி கக்கர் ஆகியோர் நவம்பர் 15-ஆம் தேதி ராஜினாமா செய்தனர். அதே நேரத்தில், ரெய்னா கரணி நவம்பர் 14-ஆம் தேதியும், நவம்பர் 13-ஆம் தேதி சுரேஷ் ரங்காச்சரும் பதவி விலகினர்.
இந்நிலையில் இப்போது இந்த ராஜினாமாக்களை கடன் வழங்குநர்கள் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடன் மற்றும் நொடித்துச் செல்லும் பணியில் ஒத்துழைக்குமாறு கடன் வழங்குநர்கள் அம்பானியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.